இரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள்: வாங்குவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
இரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள்: வாங்குவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

கால்சியம் கார்பைடு விஷத்தன்மை கொண்ட நச்சுகளை வெளியிடக்கூடும் என்பதாலும், தவறாகப் பயன்படுத்தினால் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் என்பதாலும் இந்தியாவில் பழங்களைப் பழுக்க வைக்க அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பல வீடியோக்கள் "ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட" வாழைப்பழங்களைப் பற்றி மக்களை எச்சரித்து வருகின்றன. நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்? தானே கே.ஐ.எம்.எஸ் (Thane, KIMS) மருத்துவமனையின் முதன்மை உணவுக்கட்டுப்பாட்டு நிபுணரான (Chief Dietitian) டாக்டர் அம்ரீன் ஷேக் அவர்களிடம் நாங்கள் இதுபற்றிக் கேட்டோம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அப்போது அவர் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது என்றாலும், "வைரல் வீடியோக்களில் வரும் எளிமைப்படுத்தப்பட்ட செய்திகளை நம்பி பதற்றமடையத் தேவையில்லை" என்று அவர் தெளிவுபடுத்தினார். சீரற்ற நிறத்தில் இருக்கும் ஒவ்வொரு வாழைப்பழமும் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டது அல்ல. சேமிப்பு, போக்குவரத்து மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து இயற்கை முறையிலும் வாழைப்பழங்கள் சீரற்ற நிறத்தில் பழுக்கக்கூடும்," என்று ஷேக் கூறினார். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் என்றால் என்ன? அறுவடைக்குப் பிறகு பழங்கள் விரைவாகப் பழுப்பதற்காக ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்திப் பழுக்க வைக்கப்பட்டவையே இவை. "முன்பெல்லாம், கால்சியம் கார்பைடு (Calcium carbide) சட்டவிரோதமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது; அதனால் தான் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தேவைப்பட்டன. இருப்பினும், இன்று பெரும்பாலான பெரிய விநியோகஸ்தர்கள் எத்திலீன் வாயு (Ethylene gas) போன்ற பாதுகாப்பான பழுக்க வைக்கும் முறைகளையே பயன்படுத்துகின்றனர். இது பழங்கள் இயற்கையாகவே உற்பத்தி செய்யும் பழுக்க வைக்கும் ஹார்மோனைப் போன்றது," என்று ஷேக் கூறினார். மேலும் கால்சியம் கார்பைடு விஷத்தன்மை கொண்ட நச்சுகளை வெளியிடக்கூடும் என்பதாலும், தவறாகப் பயன்படுத்தினால் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் என்பதாலும் இந்தியாவில் பழங்களைப் பழுக்க வைக்க அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. "கடுமையான விதிகளாலும் சிறந்த கண்காணிப்பாலும் இதன் பயன்பாடு குறைந்துள்ளது. நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் அனைத்து வாழைப்பழங்களும் பாதுகாப்பற்றவை என்று நினைக்கக் கூடாது," என்று ஷேக் கூறினார். நிற அமைப்பை மட்டுமே வைத்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களைக் கண்டறிய முடியுமா? நிறம் மட்டுமே ஒரு நம்பகமான காரணி அல்ல. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் சில சமயங்களில் வெளிப்புறத்தில் மஞ்சளாகவும், காம்பு அல்லது நுனிப் பகுதியில் பச்சையாகவும் காணப்படலாம்; ஆனால் இயற்கை முறையில் பழுத்த வாழைப்பழங்களும் இதே போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கலாம். "ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களைக் கண்டறிய அவற்றின் கெட்டித்தன்மை, வாசனை மற்றும் சுவை ஆகியவை மிகவும் முக்கியமானவை. அவை மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், நறுமணம் இல்லாமலும் இயல்பிற்கு மாறாகக் கடினமாகவும் இருக்கலாம்," என்று ஷேக் கூறினார். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை எப்போதாவது சாப்பிட்டால் ஆபத்தா? எத்திலீன் போன்ற அங்கீகரிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்பட்டால், அவை பாதுகாப்பானவையாகவே கருதப்படுகின்றன. சட்டவிரோதமான ரசாயனங்களைச் சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்துவதில்தான் உண்மையான பிரச்சனையே உள்ளது. பழங்களை நன்றாகக் கழுவுவதும், நம்பிக்கையான வியாபாரிகளிடம் வாங்குவதும் இந்த ஆபத்தை பெருமளவில் குறைக்கும் என்று ஷேக் கூறினார். கவனத்தில் கொள்ள வேண்டியவை: கெட்டியாகத் தோன்றும், அதே சமயம் அளவுக்கு அதிகமான பளபளப்பு இல்லாத, லேசான இயற்கை நறுமணத்துடன் கூடிய மற்றும் ரசாயன நெடி இல்லாத வாழைப்பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். வீட்டில் வைத்திருக்கும் போது மிக விரைவாகப் பழுக்கும் அல்லது சீரற்ற முறையில் அழுகும் பழங்களைத் தவிர்க்கவும். நம்பிக்கையான விற்பனையாளர்களிடம் பருவகாலப் பழங்களை வாங்குவது எப்போதுமே பாதுகாப்பான வழி. விழிப்புணர்வு முக்கியமானது, ஆனால் பயத்தை ஏற்படுத்தும் செய்திகள் தவறாக வழிநடத்தக்கூடும். "சரியான முறையில் பெறப்படும் பட்சத்தில், இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான வாழைப்பழங்கள் பாதுகாப்பானவையே. வைரல் வீடியோக்களின் குறுக்குவழிகளை நம்புவதற்குப் பதிலாக, நுகர்வோர் சுகாதாரம், அளவோடு சாப்பிடுதல் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய கொள்முதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்," என்று ஷேக் கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை