ஃபிளைட் உள்ள டபுள் டக்கரா? 30 கோடி மக்கள் டிராவல் பண்ணிருக்காங்க; ஆகாயத்தை ஆளும் பிரம்மாண்டம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
ஃபிளைட் உள்ள டபுள் டக்கரா? 30 கோடி மக்கள் டிராவல் பண்ணிருக்காங்க; ஆகாயத்தை ஆளும் பிரம்மாண்டம்

வானில் சீறிப்பாயும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் எது தெரியுமா? அதற்கான ஒரே பதில் 'ஏர்பஸ் ஏ 380' தான். தூரத்தில் இருந்து பார்த்தாலே இதன் பிரம்மாண்டம் நம்மை மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கும். உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் எது என்று கேட்டால், பலருக்கும் 'அன்டோனோவ் ஏ.என்-225 மரியா' (Antonov An-225 Mriya) நினைவுக்கு வரலாம். ஆனால், தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களை சுமந்து கொண்டு வானில் சீறிப்பாயும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் எது தெரியுமா? அதற்கான ஒரே பதில் 'ஏர்பஸ் ஏ 380' (Airbus A380) தான். தூரத்தில் இருந்து பார்த்தாலே இதன் பிரம்மாண்டம் நம்மை மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கும். இரண்டு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட வடிவம் ஏர்பஸ் ஏ 380 ஒரு சாதாரண அகலமான விமானம் அல்ல. இது முழுமையாக இரண்டு தளங்களைக் கொண்ட உலகின் ஒரே பயணிகள் விமானம் ஆகும். நீண்ட தூரப் பயணங்களை மனதில் கொண்டு, பயணிகள் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் விசாலமான இருக்கைகள், அதிக இடைவெளி மற்றும் பிரீமியம் வசதிகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பயணத்தின் போது எஞ்சின் சத்தம் அதிக அளவில் கேட்காதபடி, இதன் கேபின்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய கிராமமே பயணிக்கலாம் ஏர்பஸ் ஏ 380 விமானத்தின் மிகப்பெரிய ஆச்சரியமே இதன் பயணிக்கும் கொள்ளளவு தான். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பயணிகள் வரை இதில் பயணிக்க முடியும். அதாவது ஒரு சிறிய கிராமத்தின் மக்கள் தொகையை ஒரே விமானத்தில் ஏற்றிச் செல்லலாம். 4 சக்திவாய்ந்த எஞ்சின்கள் (Rolls-Royce Trent 900 அல்லது Engine Alliance GP7000) கொண்ட இந்த விமானம், ஒரே டேக்- ஆஃபில் சுமார் 14,800 கி.மீ (8,000 கடல் மைல்கள்) வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது. சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து சுமார் 17 மணி நேரம் வரை இதனால் ஆகாயத்தில் சீராகப் பறக்க முடியும். வரலாற்று சாதனைகள் 1990-களின் தொடக்கத்தில் ஏர்பஸ் நிறுவனம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பிரம்மாண்ட விமானத்தை உருவாக்கத் திட்டமிட்டது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, 2007-ஆம் ஆண்டில் ஏர்பஸ் ஏ 380 முதன்முறையாக வர்த்தக ரீதியான சேவைக்கு வந்தது. இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான பயணங்களை மேற்கொண்டுள்ள இந்த விமானத்தில், 30 கோடிக்கும் அதிகமான பயணிகள் உலகெங்கிலும் பயணித்து சாதனை படைத்துள்ளனர். இன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ், எதிஹாட், கத்தார் ஏர்வேஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற சர்வதேச முன்னணி விமான நிறுவனங்கள் இந்த ஆகாய அரண்மனையை இயக்கி வருகின்றன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை