ஏர் இந்தியா விமானியின் செயல்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
ஏர் இந்தியா விமானியின் செயல்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்!

செய்தியாளர் - கார்த்திகேயன் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இருந்து டெல்லிக்கு, ஏர் இந்தியாவின் AI 151 என்ற விமானம், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று புறப்பட இருந்தது. சூரிச் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மது வாசனை வீசுவதாக, பணியாளர்கள் சிலர் கண்டுபிடித்து, அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், விமானத்தில் ஆய்வு செய்ததில், இணை விமானி மது அருந்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, விமானத்தில் இருந்து அவர் கீழே இறக்கப்பட்டார். பின்னர், நடத்திய ஆரம்பகட்ட பரிசோதனையில், விமானி மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட கூடுதல் பரிசோதனைகளிலும் அவர் தோல்வி அடைந்ததால், விமானம் திட்டமிட்டபடி இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு, அந்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, சுவிட்சர்லாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் நடவடிக்கைகளை இந்தியாவின் ஒழுங்குமுறை ஆணையமே கவனிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற மீறல்களைத் தவிர்க்க கடுமையான பாதுகாப்புகளைப் பலப்படுத்துமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்பு, ஏர் இந்தியாவின் விமானி ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு விமானத்தை இயக்கியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்திருந்தது. இப்படியான சூழ்நிலையில், மீண்டும் இன்னொரு முறை, ஏர் இந்தியா விமானி மது அருந்தியதாக வெளியான தகவல்கள், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால், இந்த முறை விமானத்தை இயக்குவதற்கு முன்பே, அந்த விமானி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என்பது, சற்று ஆறுதலான செய்தி...

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை