20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கால்இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது. தொடர்ந்து அரையிறுதியில் வங்காளதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மறுபுறம், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி, மலேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியிலும் இந்தியா இலங்கை அணிகள் மோதின. அதில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படிகாலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. டி20 போட்டி: இந்தியா – ஜப்பான் இன்று பலப்பரீட்சை! நீரில் ஆக்சிஜன் அளவு 90 மடங்கு குறைவு : தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி! இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? “மின்வெட்டுக்கு காரணம் காத்து, மழை, வானிலைதான்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk