அகிலேஷ் யாதவ் சொகுசு பஸ்ஸில் அதை பார்த்தீங்களா? அப்படியே நம்ம CM விஜய் ஸ்கெட்ச்.. அங்கேதான் ஹைலைட்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
அகிலேஷ் யாதவ் சொகுசு பஸ்ஸில் அதை பார்த்தீங்களா? அப்படியே நம்ம CM விஜய் ஸ்கெட்ச்.. அங்கேதான் ஹைலைட்

கான்பூர்: 2027 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே ரெடியாகி கொண்டிருக்கின்றன.. இந்த லிஸ்ட்டில் சமாஜ்வாடி கட்சியும் டாப்பில் உள்ளது.. மிக மும்முரமாக களமிறங்கியுள்ளது.. அகிலேஷ் யாதவ் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யப் போகிறார்.. அதற்காக தயாராகியிருக்கும் பிரம்மாண்ட பஸ்தான் இப்போது ஹாட் டாபிக்காகி உள்ளது.. அகிலேஷ் யாதவின் இந்த பஸ்ஸூக்கும், நம்முடைய தமிழக அரசியலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.. அது என்ன தெரியுமா? சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "சமாஜ்வாடி PDA யாத்திரை" என்ற பெயரில் உத்தரப் பிரதேசம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரை அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உறுதியான தேதி என்ன? பிரச்சார ரூட் என்ன? அட்டவணை உட்பட இன்னும் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை. பஸ்ஸுக்குள் இத்தனை வசதிகளா? இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது... ஆனால் இது சாதாரண பிரச்சார பஸ் கிடையாது.. 15 மீட்டர் நீளமுள்ள மெர்சிடிஸ் சொகுசு பேருந்து... சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவு செய்து இந்த பஸ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. பஸ்ஸில் குண்டுதுளைக்காத கண்ணாடிகள் உள்ள.. மக்கள் கூட்டத்துக்கு நடுவே நின்று பேசுவதற்காக பஸ்ஸின் மேல்பகுதிக்கு செல்லும் ஹைட்ராலிக் லிப்ட் உள்ளது. அத்துடன் 6 பேர் உட்கார்ந்து ஆலோசனை நடத்தும் அறை, சோஃபா, படுக்கை, கிச்சன், பேன்ட்ரி, பாத்ரூம், சிசிடிவி கேமராக்கள், வெளிப்புற எல்இடி ஸ்கிரீன்கள், வைஃபை, ஏசி என பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன... அகிலேஷ் யாதவ் இதே பஸ்ஸை ஏற்கனவே 2016-17 மற்றும் 2021 தேர்தல் பிரச்சாரங்களிலும் பயன்படுத்தியுள்ளார். இங்கேதான் நம்ம விஜய் வருகிறார்.. இந்த பஸ்ஸில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி இருக்கிறது.. தமிழகத்தில் தவெகவை தொடங்கி பிரச்சார வாகனத்தைத் தயாரித்த அதே தொழில்நுட்ப கலைஞரை கொண்டுதான் அகிலேஷின் இந்த பஸ்ஸும் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. ரெட் கலரில் இருக்கும் இந்த பஸ்ஸை சுற்றிலும் அகிலேஷ் யாதவின் போட்டோக்களே பிரதானமாக இடம்பெற்றுள்ளது. வழக்கமாக சமாஜ்வாடி கட்சியின் பிரசார வாகனங்களில் அகிலேஷுடன் மற்ற முக்கிய தலைவர்களின் போட்டோக்களும் இடம்பெறும். ஆனால் இந்த முறை அந்த பாணி மாறியுள்ளது. அகிலேஷின் படம் மட்டும்தான் உள்ளன... இதுவும், தமிழகத்தில் விஜய் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தின் பாணியை போல இருப்பதாகவே சொல்கிறார்கள். பஸ்ஸின் இடதுபுறத்தில் அகிலேஷ் யாதவின் படத்துடன் "சமூக நீதியின் கொடி உயர்ந்து பறக்கும், PDA மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவரும்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. வலதுபுறத்தில் மறைந்த முலாயம் சிங் யாதவின் படத்துடன் "PDA என்பது சமூக நீதிக்கான போராட்டம்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல.. பீம்ராவ் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, ஜனேஷ்வர் மிஸ்ரா, பெனி பிரசாத் வர்மா ஆகிய தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. வலதுபுறத்தில் மறைந்த முலாயம் சிங் யாதவின் படத்துடன், "PDA என்பது சமூக நீதிக்கான போராட்டம்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பீம்ராவ் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, ஜனேஷ்வர் மிஸ்ரா, பெனி பிரசாத் வர்மா ஆகிய தலைவர்களின் படங்களும் உள்ளன. Pichhda, Dalit, Alpsankhyak என்பதன் சுருக்கம்தான் PDA. அதாவது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினரை ஒன்றிணைப்பதுதான் சமாஜ்வாடியின் இந்த அரசியல் உத்தி. 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, முஸ்லிம்கள், யாதவர்கள் மட்டுமல்லாமல் குர்மி, பால், தலித் உள்ளிட்ட சமூகங்களையும் PDA என்ற பெயரில் இணைக்க சமாஜ்வாடி முயற்சி மேற்கொண்டது. PDA-வின் "A" என்பது பெண்களையும் குறிக்கும் என்று கட்சி விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அகிலேஷ் யாதவ், P என்பதை Pandit என்றும் விரிவுபடுத்திப் பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள், துயரப்படுபவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள் என அனைவரையும் PDA-வில் இணைப்பதாகவும் கூறியுள்ளார். இந்த PDA அரசியல் உத்தியை பாஜக வழக்கம்போல் விமர்சித்து வருகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், PDA-வை "கலவரக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் தயாரிப்பு நிறுவனம்" என்று விமர்சித்துள்ளார். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல், சமாஜ்வாடி, தன்னுடைய தேர்தல் பணியை கவனிக்க தொடங்கிவிட்டது. 1.77 லட்சம் பூத்துகளிலும் கமிட்டிகளை பலப்படுத்தி, ஒவ்வொரு பூத்திலும் கூடுதலாக 5 வாக்காளர்களை இணைக்கவும் முயற்சி நடக்கிறது. ஆக, ஒருபக்கம் பூத் வேலை.. இன்னொரு பக்கம் PDA யாத்திரை.. இதற்கிடையே "விஜய் பாணியில்" பிரச்rசார பஸ்* என பயங்கர பிஸியாக இருக்கிறார் அகிலேஷ் யாதவ்...!!

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை