இத்தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என பலத்த ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களது பலத்தை நிரூபிக்க மூத்த தலைவர்களைக் களமிறக்கியுள்ளன. Dharapuram By Election Sathyabama candidate 50 crore corruption allegation தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் மோதல்களால் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யபாமா, பின்னர் அந்தப் பதவியைத் துறந்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார். தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவர் கட்சிகள் தாவிப் போட்டியிடுவது குறித்தும், சமூக வலைதளங்களில் பரவி வரும் நிதிப் பேரப் புகார்கள் குறித்தும் பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் வேட்பாளர் சத்யபாமா தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிலர் சத்யபாமாவை நோக்கி நேரடியாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். "நீங்கள் பணம் வாங்கிக்கொண்டுதான் கட்சி மாறினீர்கள், 50 கோடி ரூபாய் கைமாறியது" என்று பொதுமக்கள் ஆவேரமாகக் கேள்வி எழுப்பினர். பணம் வாங்கியதாக எழுப்பப்பட்ட புகார்களுக்கும் வேட்பாளர் சத்யபாமா தரப்பிலிருந்து கடும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், மக்களுக்கும் பிரச்சாரக் குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான வாக்குவாதத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் நிலவியது. தாராபுரம் பகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என பலத்த ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது. இங்கு நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் விநியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகள் தேர்தல் களத்தின் முக்கியப் பேசுபொருளாகியுள்ளன. வாக்காளர்களைக் கவரக் கட்சிகள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வரும் நிலையில், அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு முடிவுகள் மற்றும் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள வாக்கு எண்ணிக்கை யாருக்குச் சாதகமாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'நீங்க 50 கோடி வாங்கிட்டுதான் போனீங்க': வேட்பாளர் சத்யபாமாவை மறித்து வாக்குவாதம் செய்த பொதுமக்கள்
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk