வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக குறைக்க வேண்டும், ஊக்கத்தொகையை சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் வருகின்ற செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் செப். 26 மற்றும் 27 -ஆம் தேதி வார விடுமுறை என்பதால் 26 முதல் 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் செப்.27-ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தால் வங்கி சேவை பாதிக்கப்படுவதை தவிற்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்! “ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? ஆசிய விளையாட்டுப் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
வருகின்ற ஞாயிறன்று பொதுத்துறை வங்கிகள் செயல்படும்: நிதி அமைச்சகம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk