அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக, மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு, அதே மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் அருகே, காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குமாறும் போராடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எழுப்பும் குரல் கேட்கவில்லையா? மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தாமல், “நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்” என ரீல்ஸ் வீடியோக்களுக்காக மட்டுமே முதலமைச்சர் விஜய் தனது மனம் போன போக்கில் சம்பிரதாயத்திற்கென ஆட்சியை நடத்தி வருவதாக அரசு ஊழியர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக, காற்று நின்றுவிட்டது, தண்ணீர் வற்றிவிட்டது, சோலார் மின்சாரத்தைச் சேமிக்க இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவிற்கு எரிசக்தித் துறை அமைச்சரும் சக அமைச்சர்களும் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்து வந்த நிலையில், பணியாளர்களின் பற்றாக்குறையும், பராமரிப்புப் பணிகள் நடைபெறாததும் தான் மின்வெட்டுக்கான காரணம் என்ற புதுக் கதையை எரிசக்தித் துறை அமைச்சர் இன்று வடிவமைத்துள்ளார். மின்சாரத் துறைக்குப் பொறுப்பு வகித்துக்கொண்டு, அந்தத் துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து பிரச்னைகளிலும் மூக்கை நுழைப்பதையும், அரைகுறை அறிவோடு “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” போல் சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் எரிசக்தித் துறை அமைச்சர், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, தமிழகமே இருளில் மூழ்கிய பின்புதான் மின்வெட்டுக்கான காரணத்தையே கண்டறிந்திருக்கிறாரா? எனவே, இனியும் புதுப்புதுக் கதைகளைச் சொல்லியும், தங்களது நிர்வாகத் திறமையின்மையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் மீது பழிபோட்டு மக்களைத் திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, மின்வெட்டுக்கான உண்மையான காரணங்களை அறிந்து, அதனை நிவர்த்தி செய்து, தடையற்ற மின்சாரம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என மின்சார வாரியத்தையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்க!” – சீமான் வருகின்ற ஞாயிறன்று பொதுத்துறை வங்கிகள் செயல்படும்: நிதி அமைச்சகம் வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்! “ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“ரீல்ஸுக்காக மக்களுக்கு கை அசைத்த முதல்வர் போராட்டுபவர்களை சந்திக்காமல் சென்றது ஏன்?” – டிடிவி தினகரன்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk