வடகொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.. 908 கி.மீ. என்கிறார் கிம்.. ஆனால் 3 கணக்கு இடிக்குதே

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
வடகொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.. 908 கி.மீ. என்கிறார் கிம்.. ஆனால் 3 கணக்கு இடிக்குதே

பியாங்யாங்: வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்த முறை சாதாரண ஏவுகணை இல்லை. ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியதாக கூறப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏவுடன் நேரிலேயே சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வான்சான் பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. சுமார் 3 மணி நேர இடைவெளியில் இந்த சோதனைகள் நடந்துள்ளன. தென்கொரிய ராணுவ கண்காணிப்பின்படி, முதல் ஏவுகணை சுமார் 450 கி.மீ. தூரமும், 2-வது ஏவுகணை 600 கி.மீ.க்கும் அதிகமான தூரமும் சென்றன. பிறகு அவை கடலில் விழுந்தன.. ஜப்பான் தரப்பிலும் இந்த ஏவுகணைகள் தங்களது கடல் எல்லைக்கு வெளியே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் வித்தியாசம் இந்த முறை சோதனை செய்யப்பட்ட ஏவுகணை "ஹவாசாங்-11 மா" என்று சொல்லப்படுகிறது. ஆனால் சோதனை தொடர்பாக வெளியான படங்களில், அதன் பெயர் "ஹவாசாங்-11 மா-1" என்று உள்ளது. இதை ஒலியை விட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று வடகொரியா கூறுகிறது. ஹைப்பர்சோனிக் என்றால் என்ன தெரியுமா? இதை சிம்பிளாக சொன்னால், ஒலியை விட குறைந்தது 5 மடங்கு வேகத்தில் பறக்கும் ஏவுகணை... இது பறந்து செல்லும்போது, திடீரென தனது பாதையை மாற்றிக்கொள்ளுமாம். அதனால், இது எங்கே போகிறது என்பதை எதிரிகளால் முன்கூட்டியே கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். அதேபோல வடகொரியா வெளியிட்ட படங்களில் இன்னொரு வித்தியாசமும் தெரிகிறது. ஏவுகணை முதலில் மேலே சென்று, பிறகு கீழே இறங்கி, மறுபடியும் மேலே செல்வது போல பாதை ஸ்கிரீனில் காட்டப்பட்டுள்ளது. அதாவது, மேலிருந்து நேராக விழுவது போல இல்லாமல், வித்தியாசமான பாதையில் செல்வது போல் வடகொரியா காட்டியுள்ளது. ஆனால் உண்மையில் அப்படி நடந்ததா என்பதையும் வெளிப்புறமாக உறுதி செய்ய முடியவில்லை. அதேபோல, வடகொரியா வெளியிட்ட தகவலின்படி, இந்த ஏவுகணை 908.2 கி.மீ. தூரம் சென்றுள்ளது. அது அதிகபட்சமாக 35.8 கி.மீ. உயரம் சென்றதாகவும், ஒரு நொடிக்கு 2,146 மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்கொரியா நடத்திய கணக்கில், ஏவுகணைகள் 450 கி.மீ. மற்றும் 600 கி.மீ. தூரம் மட்டுமே சென்றுள்ளன. 2 நாடுகளும் சொல்லும் தூரத்தில் வித்தியாசம் நிறையவே இருக்கிறது. அதனால் வடகொரியா வெளியிட்ட இந்த கணக்குகளையும் அப்படியே உறுதி செய்யப்பட்ட தகவலாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஏவுகணையை வடகொரியா இப்போது முதல்முறையாக சோதிக்கவில்லை. ஏற்கனவே 2021-ம் ஆண்டிலேயே ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்ததாக அந்த நாடு சொல்லியிருந்தது. அந்த ஏவுகணை ஒலியை விட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் என்று அப்போது தெரிவித்தது. கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக வடகொரியா கூறி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது ஹவாசாங்-11 மா-1 ஏவுகணையை சோதித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள ஏவுகணையை மேலும் மேம்படுத்தியிருப்பதாக வடகொரியா காட்டியுள்ளது. எனினும், இந்த ஏவுகணையின் வேகம், பாதையை மாற்றும் திறன் உள்ளிட்டவை உண்மையில் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இந்த புதிய ஏவுகணை குறித்து கிம் ஜாங் உன் சொல்லும்போது, "இது எதிரி நாடுகளுக்கு குணப்படுத்த முடியாத தீராத தலைவலியாக இருக்கும்" என்கிறார். கிம் கொடுத்த இந்த பயங்கரமான பில்டப்புக்கு ஏற்ற அளவுக்கு ஏவுகணையின் திறன் இருக்கிறதா என்பதுதான் உலக நாடுகளின் டவுட்டாக உள்ளது..!!

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை