IPL-இல் வெடித்த சூதாட்டப் புயல்.. கைமாறிய 3 கோடி ரூபாய்.. CSK டீமை அதிரவைத்த இடைத்தரகர்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️
IPL-இல் வெடித்த சூதாட்டப் புயல்.. கைமாறிய 3 கோடி ரூபாய்.. CSK டீமை அதிரவைத்த இடைத்தரகர்!

கிரிக்கெட்டில் ’மேட்ச் பிக்சிங்’ என்பது அவ்வப்போது கிளம்பும் பூதமாக உள்ளது. சூதாட்டத் தரகர்களின் பண ஆசைக்காக அல்லது பிற ஆதாயங்களுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு மேட் பிக்சிங் செய்யப்படுகிறது. சூதாட்டத் தரகர்கள் பணம், விலையுயர்ந்த பரிசுகள் அல்லது பிற சலுகைகளை வழங்கி வீரர்கள், நடுவர்கள் அல்லது அணி நிர்வாகிகளைத் தங்கள் வலைக்குள் வீழ்த்துவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது, சர்வதேசப் போட்டிகளில் ஆரம்பித்து தற்போது ஐபிஎல் வரை தொடர்கிறது. இந்த நிலையில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை மையப்படுத்தி புதிய மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு ஒன்று வெடித்துள்ளது. ஐபிஎல் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் விவரங்களை சூதாட்ட புக்கிகளுக்கு முன்கூட்டியே கசியவிட்டிருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. தவிர, அதன்மூலம் 3 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதும் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஊடக நிறுவனம் ’தெஹல்கா’ நடத்திய ஒரு ரகசிய விசாரணையில், இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. அதன்படி, சிஎஸ்கே வீரர் ஒருவர் தனது ரகசிய ஆடும் லெவன் குறித்த தகவல்களை, டெல்லியைச் சேர்ந்த முதல் தர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். பின்னர் அந்த வீரர், அதனை லண்டனில் செயல்படும் பந்தயத் தரகர்களுக்கு விற்றுள்ளார். அதில் இடைத்தரகர் ஒருவர், 2025 ஐபிஎல் சீசனின்போது ஒரு போட்டிக்கு ரூ.60 லட்சம் கட்டணமாக வசூலித்துள்ளார். இதன்மூலம் அவர், 5 போட்டிகளில் மொத்தமாய் ரூ.3 கோடி வசூலித்துள்ளார். மேலும், இந்தத் தகவல்களை வைத்துத் தானும் நேரடியாகப் பந்தயம் கட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தவிர, நடப்பு 2026 ஐபிஎல் சீசனிலும் இதே போன்ற தகவல்களைத் தருவதாக அவர் பேரம் பேசியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக, 2026 ஐபிஎல் ஏலத்தில் அந்த குறிப்பிட்ட சிஎஸ்கே வீரர் காயம் காரணமாக எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக அந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அந்த முன்னாள் வீரரின் கூற்றை ஆய்வு செய்யும் வகையில், புலனாய்வுக் குழுவினர் ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்ற டெல்லி லீக் போட்டியின் பிளேயிங் லெவனை அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் தந்ததும், அதன்பிறகு டெல்லி லீக் போட்டியின் பிளேயிங் லெவன் அணி லிஸ்டும் ஒன்றாக இருந்துள்ளது. இதையடுத்து, கிரிக்கெட் உலகில் இந்த விவகாரம் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி தரப்பு, ”ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை