‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் அதிரடி புலனாய்வு வெளியீட்டை மேற்கோள் காட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற இரு ஆணையர்களை இருட்டில் வைத்து தன்னிச்சையாகச் செயல்பட்டு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்யவும், சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகவும் ரகசியமாகவும் செயல்பட்டு தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே சீர்குலைத்துவிட்டார் என்றும், அவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் வெளியான புலனாய்வுச் செய்தியைப் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. இதனால் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களமாக மாறின.” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, எஸ்.ஐ.ஆர்-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தங்களை மறைத்து முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து, கடந்த 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.” என்று தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ அல்லது பெரும்பான்மையின் அடிப்படையிலோதான் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், இரு ஆணையர்களுக்கே எதுவும் தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும். நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது யாருக்குத் தெரியாமல் நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வாக்காளர்களைச் சரிபார்க்கும் இ.ஆர்.ஓ அதிகாரிகளால் தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்க்க முடியாதவாறு இ.ஆர்.ஓ நெட் (ERONet) வலைத்தளம் ஒருவரின் முழுப் கட்டுப்பாட்டில் இருந்தது என இரு ஆணையர்களும் தெரிவித்துள்ளதன் மூலம், அரசியல் குறுக்கீடுகள் தெள்ளத்தெளிவாகிறது. தி.மு.க-வின் கோரிக்கைகள்:கடந்த மார்ச் மாதத்திலேயே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன. தன்னிச்சையாகச் செயல்பட்ட ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்து அத்துமீறல்களும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது: உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்! சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களம் ஆயின. இந்நிலையில், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, எஸ்.ஐ.ஆர்-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணைய விதி. ஆனால், மூவரில் இருவருக்குத் தாங்கள் பொறுப்பு வகிக்கும் அமைப்பில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் இருந்திருக்கிறதென்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. சுதந்திரமாகவும் - வெளிப்படைத்தன்மையோடும் - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது. “நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை. சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள இ.ஆர்.ஓ (ERO) எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை. அதைச் செய்வதற்கான இ.ஆர்.ஓ நெட் (ERONet) வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.” என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிர முரண்பாடுகளை அம்பலப்படுத்தி, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு பரபரப்பான புலனாய்வுச் செய்திய ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இன்றியும், அவர்களை இருட்டில் வைத்தும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வந்துள்ளார். சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் இ.ஆர்.ஓ நெட் (ERONet) வலைத்தளக் கட்டுப்பாடுகளைத் டெல்லி தலைமை அலுவலகத்தின் கீழ் கொண்டு வந்தது குறித்து கடந்த 10 மாதங்களில் 14 முறை இரு ஆணையர்களும் எழுத்துப்பூர்வமாகத் தங்கள் ஆட்சேபனைகளைப் பதிவுசெய்தும் அவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்தியைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மூவரில் இருவருக்குத் தங்கள் அமைப்பில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான தாக்குதல் என்று சாடியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே சீர்குலைத்து, அரசியல் குறுக்கீடுகளுக்கு வழிவகுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஞானேஷ் குமாரை உடனே பதவி நீக்கம் செய்க; ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புலனாய்வு செய்தியைக் குறிப்பிட்டு ஸ்டாலின் வலியுறுத்தல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk