அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க பரிசீலிக்கப்படும் என கூறியதற்கு அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் அரசு நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளில் இதுவரை முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பது பலரது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்து அரசின் கருத்தாக பார்க்கப்படும் என்பதால், வன்னியரசு தனது கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், மாணவர் விடுதிகளில் உணவு தரம் குறித்த புகார்கள் இருக்கும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது தொடர்பான முடிவு குறித்து அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தை கண்டித்து, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும், அமைச்சர் வன்னி அரசுவின் இல்லம் முன்பாகவும் போராட்டம் நடத்தப்படும், அவர் தனது கருத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும். அமைச்சர் வன்னிய அரசின் கருத்து விஜயின் அரசுக்கு தீங்கு விளைவிக்கும். வன்னியரசு போன்றவர்களை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும். அரசு விடுதிகளில் ஏற்கனவே உணவு முறையாக வேகவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மாட்டுக்கறி போன்று எளிதில் வேகாத இறைச்சியை எவ்வாறு கொடுப்பது? மாட்டுக்கறி கொடுப்பது என்பது மதம் மாற்றும் செயல் என்பதுதான் இதன் உள் அர்த்தம் என்று கூறியுள்ளார். நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்ததன் காரணமாக நடைபெறும் இந்த இடைத்தேர்தல் தேவையற்றது, இதுபோன்ற அரசியல் கட்சி மாறுதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆளுநரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளோம். புதிய தமிழகம் உள்ளிட்ட சுமார் 15 அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படும் அனைத்து கட்சி கூட்டமைப்பு, இந்த இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கும். அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் கூட்டணி அமைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தந்த நேரத்தில் முடிவு செய்யப்படும். உணவு என்பது தனிநபரின் விருப்பம், அதில் யாரும் தலையிட முடியாது என அமைச்சர் வன்னியரசு கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் க.கிருஷ்ணசாமி பதிலளித்தார். மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மாணவர் விடுதியில் மாட்டு இறைச்சி தருவதாக பேச்சு; வன்னி அரசு போன்றவர்களை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk