முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் திரு.ஹரிஹரன் அவர்களின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். திரு. ஹரிஹரன் அவர்கள் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போவின் K14 Plus 5G ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம்! “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது” – மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் – வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து ஏற்பாடு! “டெங்குவை கட்டுப்படுத்தாமல் மக்களின் உயிரோடு விளையாடும் த.வெ.க. அரசு” – எடப்படி பழனிசாமி Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம் – அணியில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk