வீட்டு நீர் பரிசோதனைகள் உணவு கலப்படத்தை அறிய உதவும் பொதுவான வழிகாட்டிகளே தவிர, அவை முழுமையானவை அல்ல என்பதால் தொழில்முறை ஆய்வகப் பரிசோதனையே சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சங்கீதா திவாரி கூறுகிறார். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சந்தையில் விற்கப்படும் போலிப் பொருட்களைக் கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இதற்காக ஆய்வகத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை; வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலம் கலப்படத்தைக் கண்டறியலாம். உணவுப் பொருட்களை தண்ணீரில் போட்டு பரிசோதிப்பதன் மூலம் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து உணவியல் நிபுணர் சோனியா நராங் பகிர்ந்துள்ள தகவல்களை, புதுடெல்லியில் உள்ள என்.எஃப்.சி., ஆர்டெமிஸ் லைட் நிறுவனத்தின் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சங்கீதா திவாரி உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த நீர் பரிசோதனைகள் பொதுவான குறிகாட்டிகள் மட்டுமே என்றும், கலப்படத்தைக் கண்டறிய இவற்றை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க முடியாது என்றும் டாக்டர் சங்கீதா திவாரி தெரிவித்துள்ளார். கருமிளகைப் பொறுத்தவரை, ஒரு கிளாஸ் தண்ணீரில் சில மிளகுகளைப் போட வேண்டும். உண்மையான மிளகு அடியில் மூழ்கும், கலப்படப் பொருட்கள் தண்ணீரில் மிதக்கக்கூடும் என்று சோனியா நராங் கூறியுள்ளார். இது பகுதி அளவு மட்டுமே உண்மை என்று விளக்கும் டாக்டர் திவாரி, உண்மையான கருமிளகின் அடர்த்தி காரணமாக அவை அடியில் மூழ்கும் என்றாலும், இது முழுமையான சோதனையல்ல என்கிறார். ஏனெனில், சில கலப்படப் பொருட்களும் அடியில் மூழ்கக்கூடும், அதே போல் சில உண்மையான மிளகுகளுக்குள் காற்று அடைபட்டிருந்தால் அவையும் மிதக்கக்கூடும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். கிராம்பு சோதனையில், ஒரு கிளாஸ் தண்ணீரில் கிராம்புகளைப் போடும்போது, தூய்மையான கிராம்புகள் செங்குத்தாக மிதக்கும் அல்லது அடியில் மூழ்கும். ஆனால், செயற்கை கிராம்பும்புகள் போன்ற கூடுதல் பொருட்கள் சேர்க்கப்பட்ட கலப்பட கிராம்புகள் கிடைமட்டமாக மிதக்கக்கூடும் என்று சோனியா நராங் தெரிவித்துள்ளார். ஆனால், தூய்மையான கிராம்புகளும் அடியில் மூழ்கலாம் அல்லது செங்குத்தாக மிதக்கலாம் என்றும், கிடைமட்டமாக மிதப்பது மட்டுமே கலப்படத்திற்கான உத்தரவாதமான அடையாளம் அல்ல என்றும் டாக்டர் திவாரி கூறுகிறார். கிராம்பின் வடிவம் மற்றும் அதில் அடைபட்டுள்ள காற்றும் அதன் மிதக்கும் தன்மையைப் பாதிக்கலாம். மஞ்சள் தூள் பரிசோதனையில், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சளைப் போட்டு கலக்காமல் அப்படியே வைக்க வேண்டும். தூய்மையான மஞ்சள் அடியில் போய் தங்கிவிடும், செயற்கை சாயங்கள் நீரில் கரைந்துவிடும் என்று சோனியா நராங் கூறியுள்ளார். இதை ஒப்புக்கொள்ளும் டாக்டர் திவாரி, இது பெரும்பாலும் உண்மைதான் என்றும், தூய்மையான மஞ்சள் தூள் வழக்கமாக தண்ணீரின் அடியில் போய் தங்கிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தேனின் தூய்மையை அறிய, ஒரு ஸ்பூன் தேனை ஒரு கிளாஸ் தண்ணீரில் விட வேண்டும். தூய்மையான தேன் விரைவில் கரையாமல் அடியில் தங்கிவிடும், கலப்பட தேன் நீரில் கரைந்துவிடும் அல்லது அடுக்குகளை உருவாக்கும் என்று சோனியா நராங் பகிர்ந்துள்ளார். ஆனால், இதைவிட நம்பகமான சோதனை 'பெருவிரல் சோதனை' என்று டாக்டர் திவாரி கூறுகிறார். ஒரு துளி தேனை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு இடையே வைத்து தேய்க்கும்போது, தூய்மையான தேன் தன் வடிவத்தை மாறாமல் தக்கவைத்துக்கொள்ளும். முட்டையின் தரத்தைக் கண்டறிய, ஒரு கப் தண்ணீரில் முட்டையை போட வேண்டும். புதிய முட்டைகள் தண்ணீரின் அடியில் மூழ்கி தட்டையாகப் படுத்துக் கொள்ளும், பழைய முட்டைகள் பெரிய காற்றுப் பைகள் காரணமாக நீரில் மிதக்கும் என்பது சோனியா நராங்கின் கருத்தாகும். இந்த சோதனையை டாக்டர் திவாரியும் ஒப்புக்கொள்கிறார். முட்டையின் அகலமான முனையில் சிறிய காற்றுப் பை மட்டுமே இருப்பதால் புதிய முட்டைகள் அடியில் மூழ்குகின்றன. முட்டையின் வயது கூடும்போது, அந்த காற்றுப் பை பெரிதாகி மிதக்க வைக்கிறது. இருப்பினும், இது முழுமையான குறிகாட்டி அல்ல; ஏனெனில், மிகவும் குளிர்ந்த நீர் புதிய முட்டைகளைக் கூட மிதக்க வைக்கக்கூடும் என்று அவர் விளக்குகிறார். பாலை பொறுத்தவரை, 5 முதல் 10 மி.லி பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் குலுக்க வேண்டும். பாலில் சோப்புத்தூள் கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அது அடர்த்தியான நுரையை உருவாக்கும்; தூய்மையான பால் மிகவும் மெல்லிய நுரை அடுக்கை மட்டுமே உருவாக்கும் என்று சோனியா நராங் தெரிவித்துள்ளார். சோப்புத்தூள் கலப்படத்தைக் கண்டறிய பாலைக் கொதிக்க வைப்பதே மிகவும் நம்பகமான சோதனை என்று டாக்டர் திவாரி மேலும் சேர்க்கிறார். தூய்மையான பால் திரியக்கூடும், ஆனால் சோப்புத்தூள் கலக்கப்பட்ட பால் திரியாமல் போகலாம். நினைவில் கொள்ள வேண்டியவை: இந்த நீர் பரிசோதனைகள் அனைத்தும் பொதுவான குறிகாட்டிகள் மட்டுமே என்றும், கலப்படத்தைக் கண்டறிய இவற்றை மட்டுமே முற்றிலும் சார்ந்திருக்கக் கூடாது என்றும் டாக்டர் சங்கீதா திவாரி வலியுறுத்துகிறார். உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், அதை ஒரு தொழில்முறை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதிப்பதே சிறந்தது. பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
முட்டை, பால், தேனில் கலப்படமா? வீட்டிலேயே நீர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியுமா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk