எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் என்ன செய்தார்? புலனாய்வு அறிக்கையால் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் என்ன செய்தார்? புலனாய்வு அறிக்கையால் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

பட மூலாதாரம், Sanjeev VermaHindustan Times via Getty Images கடந்த சில மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்திய அரசியல் களத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து "10 மாதங்களில் 14 ஆட்சேபனைகளை" இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டது முதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல், அத்துடன் "அனுமதியற்ற, சட்டவிரோத" நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குதல் வரை பல்வேறு விவகாரங்கள் இந்த ஆட்சேபனைகளில் அடங்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பிகாரில் ஜூன் 2025-ல் தொடங்கியது; 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவு வாக்காளர் பட்டியல்களிலிருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் இச்செயல்முறைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் மூலம் பதிலளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேள்விகளை எழுப்பி வருகின்றன. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்திற்குள் இந்த விவகாரங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டதாகவும், ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிக்கை கூறுகிறது. தற்போது இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், எஸ்ஐஆர் நடைமுறையின் கீழ் பெயர்கள் நீக்கப்பட்டதோ அல்லது சேர்க்கப்பட்டதோ தங்கள் தோல்விக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆர்ஜேடி தலைவரும் பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்த அறிக்கையை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து, ​​கடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் நிர்வாக இயந்திரத்தால் தோற்கடிக்கப்பட்டதாக மீண்டும் வலியுறுத்தினார்; "நாங்கள் தோற்கவில்லை, நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்" என்று கூறியுள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவரான டெரிக் ஓ பிரையன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு கடந்த 10 மாதங்களில் ஆணையத்தின் பல்வேறு முடிவுகளுக்குத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்ததாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் ரித்திகா சோப்ரா குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, 'ஜூலை மாதத்தில் புதிய வாக்காளர்களுக்கான 'படிவம் 6'-ல் (Form 6) எஸ்ஐஆர் தொடர்பான கேள்வி ஒன்று சேர்க்கப்பட்டது. சட்டத்தைத் திருத்தாமல் இதைச் செய்ய முடியாது என்று மே மாதத்தில் இரு ஆணையர்களும் கூறியிருந்தனர். இருப்பினும், அந்த மாற்றம் செய்யப்பட்டது; இதை 'அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது மற்றும் சட்டவிரோதமானது' என்று சந்து விமர்சித்தார்.' மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, ​​வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது மற்றும் அது தொடர்பான மேல்முறையீடுகள் குறித்தும் இரு ஆணையர்களும் கேள்விகளை எழுப்பியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஜூலை மாத இறுதியில், டெல்லியில் உள்ள ஆணையத்தின் நிர்வாகப் பிரிவில் பணிப் பகிர்வு செய்யப்பட்டதற்கும் இரு ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆணையத்தை நிர்வகிக்கும் சட்டத்தின் 'தெளிவான மீறல்' என்று கூறி, அவர்கள் அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதனுக்குத் தனித்தனியாகக் கடிதங்கள் எழுதினர். மறுநாளே, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. ரித்திகா சோப்ரா அறிக்கையின்படி, கோவாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளால் 97 வாக்காளர்கள் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டும், அவர்களின் பெயர்கள் மையப்படுத்தப்பட்ட மென்பொருளில் (centralized software) சேர்க்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருளின் மீதான மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு குறித்தும் இரு ஆணையர்களும் கேள்விகளை எழுப்பினர். பட மூலாதாரம், 409b81e0-b717-11f1-8d21-19ad84e0e822 இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரங்களில் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது; பல தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை விமர்சித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஐந்து மாதங்களுக்கு முன்பு, 60-க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். தலைமைத் தேர்தல் ஆணையரின் பல முடிவுகளுக்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி தற்போது வெளியாகியுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டுவருவதற்கான நேரம் இது. ஜனநாயகத்தைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தை உள்ளிருந்தே வலுவிழக்கச் செய்வதற்காகவே ஞானேஷ் குமார் குப்தாவை பாஜக பாதுகாக்கிறது" என்று தெரிவித்துள்ளார். "தேர்தல் ஆணையர்களால் கூட்டாக நிர்வகிக்கப்பட வேண்டிய அமைப்பின் மீது ஞானேஷ் குமார் குப்தா அதீத கட்டுப்பாட்டைச் செலுத்துகிறார். இதன் மூலம், பாஜகவின் தூண்டுதலின் பேரில் இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை அழிப்பதில் அவர் தனி ஒருவராகச் செயல்பட்டுள்ளார்" என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் எழுதினார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் 'எக்ஸ்' தளத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டார்; அதில், பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலின் போதும், 'குறைபாடுகள் நிறைந்த எஸ்ஐஆர் செயல்முறை' குறித்துத் தனது கட்சி விளக்கக்காட்சி ஒன்றை அளித்ததாக அவர் குறிப்பிட்டார். "வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினோம்; ஆனால், தேர்தல் ஆணையம் எனும் அரசியலமைப்பு அமைப்பின் தலைவரான தலைமைத் தேர்தல் ஆணையர், அனைத்து அரசியலமைப்பு மரபுகள், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைத் தகர்த்து, ஒவ்வொரு முறையும் அனைவரையும் தவறாக வழிநடத்தினார்." ஆர்ஜேடி எம்.பி.யான மனோஜ் ஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பே ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகத் தோன்றுவது மிகவும் கவலைக்குரியது." என்று குறிப்பிட்டுள்ளார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது குற்றம் சாட்டிய அவர், "தேர்தல் ஆணையம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. பிரதமர் நாட்டைப் பாதுகாக்க விரும்பினால், அமித் ஷாவை அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறினார். இருப்பினும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலர் (பெயர் குறிப்பிடப்படாத நிலையில்) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன; அதன்படி, இரண்டு தேர்தல் ஆணையர்கள் எஸ்ஐஆர் தொடர்பான சில சிக்கல்களை எழுப்பியிருந்தாலும், இறுதி முடிவுகள் மூன்று ஆணையர்களின் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டன. பட மூலாதாரம், 102f4ef0-b718-11f1-b1d1-571ed4d7ff2c சமீப ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்பட்டனவா என்று காங்கிரசும் பல எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில்"2026 ஏப்ரல் 24 அன்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்வதற்கான புதிய தீர்மான அறிவிப்பை, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்தனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்னும் ஒத்திவைக்கப்படவில்லை (முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை). நிலுவையில் உள்ள அந்த அறிவிப்பு குறித்து, மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவர் இப்போது முடிவெடுப்பாரா? இன்று, கேள்வி என்பது வெறும் 'வாக்குத் திருட்டு' பற்றியது மட்டுமல்ல; இந்தியாவின் ஜனநாயகத்தையும் அதன் நிறுவனங்களையும் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது குறித்த கேள்வி இது. அந்த நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை சார்ந்த கேள்வி இது. தேர்தல் ஆணையத்திற்குள்ளிருந்தே வெளிவரும் இந்த ஆவணங்கள், மோதி அரசாங்கம் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் பங்கு குறித்து மிகத் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன. பிரதமர் மோதி இதற்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், Chandradeep Kumar/ The India Today Group via Getty Images தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது என்று தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ஞானேஷ் குமார் உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் தனது பதிவில், "ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களம் ஆயின. இந்நிலையில், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, எஸ்ஐஆரு க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அசுதோஷ், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது 'எக்ஸ்' தளத்தில்"மூன்று கேள்விகள் - யாருடைய உத்தரவின் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டத்திற்கு முரணான முடிவுகளை எடுத்தார்? தான் என்ன செய்தாலும் யாரும் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று அவர் ஏன் உறுதியாக நம்பினார்? பாஜக இன்னும் அவரை ஆதரிக்குமா?" என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் எழுதுகையில் "இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) வெளியிட்ட செய்திக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவியில் நீடிக்க எந்தக் காரணமும் இல்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்க நடவடிக்கை (impeachment) மூலம் நீக்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் தனது 'எக்ஸ்' பக்கத்தில்"ரித்திகா சோப்ராவின் அறிக்கை தேர்தல் ஆணையத்தின் உள் நடைமுறைகளை மட்டுமல்லாமல், கடந்த ஓராண்டில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது; ஏனெனில், இக்காலகட்டத்தில் ஆணையத்திற்குள்ளேயே இத்தகைய ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன." என்று கூறியுள்ளார். புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் 'எக்ஸ்' பக்கத்தில் "எஸ்ஐஆர் தொடர்பான பல்வேறு தேர்தல் ஆணைய உத்தரவுகளில் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகளை மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்த்தனர். ஆனால் அரசாங்கத்திற்காக செயல்படும் ஞானேஷ் குமார் சட்டவிரோத உத்தரவுகளைத் தொடர்ந்து பிறப்பித்தார்; இதன் விளைவாக 13 மில்லியனுக்கும் (1.3 கோடி) அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்தனர்! உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கவனத்தில் கொள்ள வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது 'எக்ஸ்' பக்கத்தில், "ஒரு அரசியலமைப்பு சார்ந்த அமைப்பு இப்போது ஒரு தனிநபரின் நிறுவனமாக மாறி, தனது எஜமானரின் விருப்பப்படி செயல்படுகிறதா? இதற்கு ஞானேஷ் குமார் பதிலளிப்பாரா?" என்று கூறியுள்ளார். எஸ்ஐஆர்-ஐக் கையாண்டதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காகத் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோர வேண்டும் என்று மற்றொரு முன்னாள் தேர்தல் ஆணையரான அசோக் லவாசா இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையை ராஜ்தீப் சர்தேசாய் சுட்டிக்காட்டினார். பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images தேர்தல் ஆணைய உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் ஆகியவை அதன் வழக்கமான உள் நடைமுறையின் ஒரு பகுதிதான் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. தேர்தல் செயல்முறையை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும், சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுத்தவும் ஆணையம் பாடுபடுவதாகத் தனது அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது. ஆணையத்தின் கூற்றுப்படி, ஏதேனும் ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னதாகக் கருத்துகளும் ஆலோசனைகளும் தெரிவிக்கப்படுவது இயல்பான ஒன்றாகும். ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களைத் தவிர, தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அதன் அதிகாரிகளும் வழங்கலாம். கடந்த 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சில உள்நிலை அவதானிப்புகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்ப்பது முழுமையான சித்திரத்தை வழங்காது என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆணையத்தின் தகவலின்படி, கடந்த ஆண்டில் சுமார் 40 புதிய முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டன மற்றும் பல தேர்தல் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்துதல் மற்றும் சிறப்புத் தீவிர திருத்தப் பணி ஆகியவையும் இதில் அடங்கும். பிகார், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டதை ஆணையம் சுட்டிக்காட்டியது. தனது டிஜிட்டல் தளமான 'ECInet'-ன் பாதுகாப்பு குறித்துக் குறிப்பிட்ட ஆணையம், தரவுப் பாதுகாப்பு மற்றும் தணிக்கை அமைப்புகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை மிகுந்த நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நிறைவேற்றத் தான் உறுதிபூண்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை