கொல்லி மலை, மகேந்திரகிரி... அழகு தழும்பும் கிழக்கு தொடர்ச்சி மலை டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்; ஒருமுறை வந்து போங்க

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
கொல்லி மலை, மகேந்திரகிரி... அழகு தழும்பும் கிழக்கு தொடர்ச்சி மலை டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்; ஒருமுறை வந்து போங்க

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து தொடங்கி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் வரை கிழக்கு தொடர்ச்சி மலை நீண்டு நிற்கின்றது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு, துண்டாக அமைந்துள்ள மலைத் தொடர், கிழக்கு தொடர்ச்சி மலை என்றழைக்கப்படுகிறது. இந்த மலைத் தொடர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து தொடங்கி சாயமலை, காரிசாத் தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில் பட்டி திருப்பரங் குன்றம், அழகர்கோவில், யானைமலை, கொல்லி மலை, பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை மற்றும் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்த மலைத்தொடரில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்கள இந்த பதிவில் பார்ப்போம். அரக்கு பள்ளத்தாக்கு (Araku Valley) ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த அரக்கு பள்ளத்தாக்கு அதன் குளிர்ந்த வானிலை, காபி தோட்டங்கள் மற்றும் அழகிய பசுமையான மலைகளுக்குப் புகழ்பெற்றது. இங்கு செல்லும் ரயில் பயணமும் இலக்கைப் போலவே மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். 2. தியோமாலி (Deomali) ஒடிசாவின் மிக உயர்ந்த சிகரமான தியோமாலி, பரந்த மலைக் காட்சிகளையும், மனிதக் கரங்களால் தீண்டப்படாத இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் வழங்குகிறது. 3. ஹார்ஸ்லி ஹில்ஸ் (Horsley Hills) ஆந்திராவில் உள்ள இந்த ஹார்ஸ்லி ஹில்ஸ் இதமான தென்றல் வீசும் காட்சிமுனைகள் மற்றும் வனப் பாதைகளைக் கொண்டது. இந்த ஹார்ஸ்லி ஹில்ஸ், அமைதியான வார இறுதிப் பயணத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு மலை வாசஸ்தலமாகும். 4. கொல்லி மலை (Kolli Hills) தமிழகத்தில் உள்ள இந்த கொல்லி மலை வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், அருவிகள் மற்றும் அடர்ந்த பசுமைக்கு பெயர் பெற்றது. இந்த கொல்லி மலை, அமைதியான சூழலை விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற இடமாகும். 5. லம்பசிங்கி (Lambasingi) ஆந்திரப் பிரதேசத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் லம்பசிங்கி, பனிமூட்டம் சூழ்ந்த மலைகளுக்காகவும் குளிர்ந்த காலைப் பொழுதுகளுக்காகவும் பெரிதும் விரும்பப்படுகிறது. 6. மகேந்திரகிரி (Mahendragiri) ஒடிசாவில் உள்ள மகேந்திரகிரி தொடர் மலைகளையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டது. இந்த மகேந்திரகிரி, இயற்கை அழகையும் வரலாற்றுச் சிறப்பையும் ஒன்றாக இணைக்கிறது. 7. சிம்லிபால் தேசியப் பூங்கா (Simlipal National Park) ஒடிசாவில் உள்ள காடுகள், அருவிகள் மற்றும் வனவிலங்குகள் நிறைந்த சிம்லிபால், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை வளத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது. 8. ஏற்காடு (Yercaud) தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைத் தொடர் ஆரஞ்சுத் தோட்டங்களாலும் காபி எஸ்டேட்களாலும் சூழப்பட்டது. இந்த ஏற்காடு, கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலமாகும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை