அரசு கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு இந்த ஆண்டு கூடுதலாக 3,195 இடங்கள் உட்பட மொத்தம் 1,30,154 இடங்கள் உள்ளன. இதில் இதுவரை 96,477 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 74% இளங்கலை மற்றும் 55% முதுகலை சேர்க்கை பதிவு (Image: AI) தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி நான்கரை மாதங்கள் கடந்தும் பல இடங்கள் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 7-ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கை செயல்முறை தற்போது வரை நடைபெற்று வருகிறது. இளங்கலை படிப்புகளில் இந்த ஆண்டு கூடுதலாக ஒதுக்கப்பட்ட 3,195 இடங்கள் உட்பட மொத்தம் 1,30,154 இடங்கள் உள்ளன. இதில் இதுவரை 96,477 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்; இது மொத்த இடங்களின் அடிப்படையில் 74.13% ஆகும். இளங்கலை படிப்புகளில் சேர்ந்தவர்களில் 40,887 மாணவர்களும், 55,566 மாணவிகளும் அடங்குவர். மறுபுறம், முதுகலை (PG) படிப்புகளில் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாகவே உள்ளது. மொத்தம் உள்ள 24,812 இடங்களில் 13,700 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர், இது 55.22% மட்டுமே. முதுகலையில் சேர்ந்தவர்களில் 4,061 ஆண்களும், 9,627 பெண்களும் அடங்குவர். மேலும், செப்டம்பர் 16 நிலவரப்படி கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் (DCE) தரவுகளின்படி, முதுகலை சேர்க்கை 54.99% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவாகும் (2023-24 கல்விய ஆண்டில் 66.19% ஆக இருந்தது). முதுநிலைப் படிப்புகளுக்கான வரவேற்பு குறைந்து வருவதற்கு பட்டதாரிகளின் மாறிவரும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் தேர்வுகளும் காரணமாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல பட்டதாரிகள் பாரம்பரிய முதுநிலைப் படிப்புகளைத் தொடர்வதற்குப் பதிலாக உடனடியாக வேலைக்குச் செல்லவும், தொழில்முறைப் படிப்புகளில் சேரவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் கே. பாஸ்கர் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "பாரம்பரிய முதுகலை படிப்புகள் மாறிவரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப மாறவில்லை. பாடத்திட்ட மாற்றம், திறன் சார்ந்த விருப்பப் பாடங்கள் மற்றும் வலுவான தொழில் துறை கூட்டாண்மை ஆகியவை அவசியம்," என்றார். மேலும் பல அரசு கல்லூரிகளில் வலுவான வேலைவாய்ப்பு (Placement) வாய்ப்புகள் இல்லாததும், இன்டர்ன்ஷிப் மற்றும் தொழில்துறை இணைப்புகள் குறைவாக இருப்பதும் மாணவர்கள் முதுகலை படிப்பைத் தவிர்க்கக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), தரவு பகுப்பாய்வு (Data Analytics), டிஜிட்டல் வர்த்தகம் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டு முதுகலை சேர்க்கைக்கான அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால், சேர்க்கை சதவீதம் மேலும் 2% முதல் 3% மட்டுமே அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அட்மிஷன் தொடங்கி நான்கரை மாதம் ஆகியும் நிரம்பாத கலை- அறிவியல் கல்லூரிகள்: இன்னும் 1.4 லட்சம் சீட் காலி
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk