2022 டூ 2026 தேர்தல்கள்| வெற்றிக்குப் பிறகு கட்சி மாறிய 111 உறுப்பினர்கள்.. முதலிடத்தில் நாகாலாந்து!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
2022 டூ 2026 தேர்தல்கள்| வெற்றிக்குப் பிறகு கட்சி மாறிய 111 உறுப்பினர்கள்.. முதலிடத்தில் நாகாலாந்து!

2022 முதல் 2026 வரையிலான தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியுள்ளதாக ADR மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழு கண்டறிந்துள்ளது. இதில் நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் கட்சி மாறியவர்கள் பதிவாகியுள்ளனர். 2022 முதல் தற்போது வரை பொதுத் தேர்தல், சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என நடைபெற்றுள்ளன. குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர். இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டு திரிபுரா, மேகலாயா, நாகாலாந்து. கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுடன், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஜம்மு-காஷ்மீர் (10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது), ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஆண்டு டெல்லி மற்றும் பீகாரில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நடப்பாண்டில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில்தான், இத்தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 111 பேர் கட்சி மாறியுள்ளதாக அது தெரிவித்திருக்கும் நிலையில், அதில் மக்களவை உறுப்பினர்கள் 26 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேரும் அடக்கம். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் 78 பேரும் கட்சி மாறியுள்ளனர். இந்தப் பட்டியலில் நாகாலந்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தம் 32 பேர் கட்சி மாறியுள்ளனர். இங்கு அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களே கட்சி மாறியுள்ளனர். இதற்கடுத்து மேற்கு வங்கத்தில் 20 பேரும், தெலங்கானாவில் 9 பேரும், கோவா (8 எம்.எல்.ஏக்கள்) மற்றும் பஞ்சாப்பில் (எம்பி 6 + எம்.எல்.ஏ. 2) தலா 8 பேரும், மகாராஷ்டிரா (எம்பிக்கள் 6) மற்றும் மேகலாயாவில் (எம்.எல்.ஏக்கள் -6) தலா 6 பேரும் உள்ளனர். நாகாலாந்தைப் பொறுத்தவரை NDPP கட்சியிலிருந்து 25 பேர் மாறியுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸிலிருந்து 20 பேர் வெளியேறி உள்ளனர். இவர்கள் அனைவரும் எம்பிக்களாக உள்ளனர். மேலும், காங்கிரஸிலிருந்து 19 பேரும், பாரத் ராஷ்டிர சமிதியிலிருந்து 9 பேரும், ஆம் ஆத்மி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்தும் தலா 7 பேர் கட்சி மாறியுள்ளனர். இந்தக் கட்சிகளிலிருந்து விலகியவர்களில் நாகா மக்கள் முன்னணியில் இணைந்தவர்களில் 32 பேர் உள்ளனர். அடுத்து பாஜகவில் 29 பேர் உள்ளனர். நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியாவில் 20 பேரும், காங்கிரஸில் 9 பேரும் உள்ளனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை