வளைகுடா நாடுகளில் நிலவிய போர் சூழ்நிலை காரணமாக பாஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 மத்திய கிழக்கு நாடுகளில், 20 கல்வி பாடங்கள் உட்பட 40 பாடங்களுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வாரியம் ரத்து செய்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளான பாஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகளில் 20 கல்விப் பாடங்கள் உட்பட 40 பாடங்களுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ ரத்து செய்திருந்தது. வளைகுடா நாடுகளில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் (Special Assessment Scheme) மூலம் வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தியடையாத மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலத்தில் படிக்க: மத்திய கிழக்கு நாடுகளான பாஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகளில் 20 கல்விப் பாடங்கள் உட்பட 40 பாடங்களுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ ரத்து செய்திருந்தது. இது குறித்து சி.பி.எஸ்.இ தேர்வுக்கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளைத் தயார் செய்வதற்காக சி.பி.எஸ்.இ மார்ச் 27 அன்று ஒரு மதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, இந்தியா மற்றும் பிற வெளிநாடுகளில் உள்ள 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் சேர்த்து, மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த அனைத்து வழக்கமான (regular) மாணவர்களுக்கான முடிவுகளும் மே 13 அன்று வெளியிடப்பட்டன" என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், "இந்த நாடுகளைச் சேர்ந்த தனித்தேர்வர்களின் (private candidates) முடிவுகளும் பின்னர் அதே திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டன. இந்த மதிப்பீட்டுத் திட்டத்தில், தங்கள் தேர்வு முடிவுகளில் திருப்தியடையாத மாணவர்களுக்கு, நடத்த முடியாமல் போன பாடங்களில் தேர்வுகள் நடத்துவதன் மூலம் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது" என்றார். மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், முன்னர் ரத்து செய்யப்பட்ட 40 பாடங்களுக்கும் தேர்வுகளை நடத்த தற்போது சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாக பரத்வாஜ் தெரிவித்தார். "மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களில் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வின் முடிவே இறுதியானது மற்றும் இதுவே முந்தைய மதிப்பெண்களுக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு தேர்வுத் தேதி மற்றும் அட்டவணை அறிவிக்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் நேரடியாகத் தேர்வுப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். எந்தவிதத் தேர்வுவரியும் (கட்டணமும்) வசூலிக்கப்பட மாட்டாது. தேர்வு மையங்களில் எந்த மாற்றமும் இருக்காது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மறுமதிப்பீடு போன்ற எந்த வசதிகளும் வழங்கப்பட மாட்டாது" என்றும் அவர் கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
வளைகுடா நாடு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மீண்டும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk