ரோம்: இத்தாலி பள்ளிகளில் மாணவிகள் புர்கா மற்றும் நிகாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்துக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அமைச்சரவை கொண்டு வந்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. பல இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப், புர்கா, நிகாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சில நாடுகளில் ஆடை கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இருப்பது இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இல்லாத நாடுகளில் சில நேரங்களில் இஸ்லாமிய பெண்களின் ஆடைகள் குறித்த விவகாரம் சர்ச்சையாவது அவ்வப்போது நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது சர்ச்சையானது. அந்த வகையில் தற்போது இத்தாலி பள்ளிகளில் மாணவிகள் புர்கா, நிகாப் அணிய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இத்தாலியை எடுத்து கொண்டால் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் தலைவராக இருக்கும் ஜார்ஜியா மெலோனி தான் பிரதமராக இருக்கிறார். இவர் தீவிரமான வலதுசாரி கொள்கையை கொண்டவர். இவரும், பிரதமர் நரேந்திர மோடியும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் தான் இத்தாலி பள்ளிகளில் மாணவிகள் புர்கா, நிகாப் அணிவதை தடை செய்யும் சட்டத்துக்கு ஜார்ஜியோ மெலோனியின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி சட்டமாக்கி உள்ளது.
பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய அதிரடி தடை.. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புதிய சட்டம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk