இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகியுள்ள என்பதை இந்த பதிவில் பார்ப்போம். வாரந்தோறும் தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு இணையாக ஒ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகியுள்ள என்பதை இந்த பதிவில் பார்ப்போம். கவின் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வெளியான படம் ஹாய். காதல் காமெடியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்கியிருந்தார், பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா பாக்யராஜ், வி.டிவி. கணேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.இந்த படம் ஜீ 5 தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. மீரா கதிரவன் இயக்கத்தில் இஸ்லாத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட படம் ஹபீபி. இஜா, மாளவிகா மனோஷ் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்த இந்த படம் கடந்த ஜூன் 12-ந் தேதி வெளியானது. .ந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சோனி லிவ் சேனலில் வெளியாகியுள்ளது. போட்டோகிராஃபர் (தமிழ்) அஷ்ரப் அலி இயக்கி நடித்துள்ள படம் போட்டோகிராஃபர். ஃபேண்டஸி த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி வௌயானது. இந்த படம் தற்போது ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது, ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு) தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி வெளியான படம் ரம்பா ஊர்வசி மேனகா. காமெடி ஃபேண்டஸ அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது, தெலுங்கு மட்டும் இல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை பார்க்கலாம். 𝐓𝐡𝐢𝐬 𝐖𝐞𝐞𝐤 𝐎𝐓𝐓 𝐑𝐞𝐥𝐞𝐚𝐬𝐞 🤩🍿𝐓𝐚𝐦𝐢𝐥#Hi (Tamil - Original, Telugu, Kannada, Malayalam) - Zee5 #Habeebi (Tamil - Original, Telugu, Kannada, Malayalam, Hindi) - SonyLiv#Photographer (Tamil) - PrimeVideo𝐓𝐞𝐥𝐮𝐠𝐮#RambaOorvasiMenaka (Telugu - Original,… pic.twitter.com/E02COxh9g1 தெலுங்கில் எம்.எஸ்.ராஜூ இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ந் துதி வெளியான படம் அகதா. சூப்பர் நேச்சுரல் ஹாரார் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது. தெலுங்கு மட்டும் இல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை பார்க்கலாம். மேன்ஷன் ஹவுஸ் மல்லேஷ் (தெலுங்கு) தெலுங்கில் ஸ்ரீநாத் மெகந்தி, காயத்ரி ரமணா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மேன்ஷன் ஹவுஸ் மல்லேஷ். இந்த படம் தற்போது ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. I’m ELAYARAJA D, a seasoned media professional with over 9 years of experience in digital journalism. Currently Working as a Senior Sub-Editor at The Indian Express (Tamil) since Dec 2020, I specialize in reporting on Entertainment, Sports, and Tamilnadu news. My Media journey began in 2015 as a Playout Operator and Video Editor In JM Entertainment Network (Local TV Channel) in Trichy Upto 2017. Then spent Three years as a Sub Editor In Dineseithigai Online Media (Malayalam Express Group) Upto Dec 2020 and have extensive experience Sports reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from Periyar EVR College, Trichirapalli and a Master’s in Visual Communication from Thiru.Vi.Ka Arts College Thiruvarur. Contact: d.elayaraja@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
OTT: காதல் காமெடி முதல் ஹாரார் த்ரில்லர் வரை: இந்த வார ஓ.டி.டி.யில் மிஸ் பண்ணாம பாருங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk