12 முறை வலம்! ரூ. 12 காணிக்கை! ஐந்து தலை நாகம் வடிவில் அருளும் ராகவேந்திரர்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Events ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
12 முறை வலம்! ரூ. 12 காணிக்கை! ஐந்து தலை நாகம் வடிவில் அருளும் ராகவேந்திரர்!

தஞ்சையில் ராகவேந்திரர் தவம் செய்த புனிதத் தலம் பற்றி.. தஞ்சை ராகவேந்திரர் கோயில் - video crop தஞ்சாவூர்‌ அருகே பிருந்தாவனம் என்னும் இடத்தில் ராகவேந்திரர் ஆலயம் அமைந்துள்ளது. மணிமுத்தாறு என்று அழைக்கப்படும் வடவாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம். ஆலம், அரசு, வேம்பு, இலுப்பை, தேக்கு, ருத்ராட்ச மரங்களுக்கு இடையே இயற்கை சூழலில் அமைதியாகவும் - ரம்மியமாகவும் காட்சி அளிக்கிறது இத்திருக்கோயில். 400 ஆண்டுகளுக்கு முன்பு 1601 ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே புவனகிரியில் வெங்கடநாதன் என்ற திருநாமத்தோடு பிறந்த ராகவேந்திரர் கும்பகோணத்தில் சகலகலா வல்லவராகத் தேர்ச்சி பெற்று தனது 21 வயதில் தஞ்சைக்கு வருகை தருகிறார். தஞ்சைக்கு வந்த அவர் ரகுநாத பூபால் என்ற நாயக்கர் மன்னர் முன்னிலையில் சன்னியாச தீட்சை பெற்று ராகவேந்திரராக அவதரிக்கிறார். பின்னர், சோலைகள் நிறைந்த வடவாறு கரையில் 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்து தஞ்சையின் வறட்சியைப் போக்கி தேச சஞ்சாரம் புறப்படுகிறார். ராகவேந்திரர் தஞ்சை மண்ணை விட்டுச் சென்றதால் ரகுநாத பூபால் மன்னருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு - தஞ்சையில் கடும் பஞ்சம், வறட்சி ஏற்படுகிறது. இதனையடுத்து நாயக்கர் மன்னர் மனதால் ராகவேந்திரரை வழிபட்டு தஞ்சாவூரிலேயே தங்கி அருள்பாலிக்க வேண்டும் என மன்னர் பிரார்த்தனை செய்கிறார். ''நான் தவம் இருந்த இடத்தில் பிருந்தாவனம் அமையுங்கள். நான் அங்கு என் சூட்சும சரீரத்தால் என்றென்றும் வாழ்ந்து தஞ்சைக்கு அருள் புரிவேன் என்று அசரீரியாக ராகவேந்திரர் கூறியதாக தல வரலாறு கூறுகிறது. தொடர்ந்து அவர் தவம் செய்த இடத்தில் ஐந்து தலை நாக வடிவில் தோன்றி பக்தர்களுக்கு இன்று வரை அருள்பாலித்து வருகிறார். வெயில், மழை, பனி, காற்று எனத் திறந்த வெளியில் எவ்வாறு தவம் புரிந்தாரோ அதே நிலையில் தான் மேற்கூரை இல்லாமல் தற்போது காட்சி தருகிறார். ராகவேந்திரர் இங்கு மட்டும்தான் தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் மட்டும்தான் ம்ருதிகை என்ற திருமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்திருக்கும் ஆந்திர மாநிலம் மந்திராலயத்தில் கூட ம்ருதிகை வழங்கப்படுவதில்லை. ராகவேந்திரர் 12 ஆண்டுகள் இங்குத் தவம் செய்ததால், ரூ. 12 காணிக்கை வைத்து 12 சுற்றுகள் சுற்றி வந்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு நடைபெறும் எந்த பூஜைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் ராகவேந்திரர் ஆராதனை விழா மற்றும் பட்டாபிஷேக திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து கள்ளப்பெரம்பூர் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடை திறந்திருக்கும். வியாழக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும்‌. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை