டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 1,758 ஊழியா்களுக்கு நோட்டீஸ்: 241 போ் பணியிடை நீக்கம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 1,758 ஊழியா்களுக்கு நோட்டீஸ்: 241 போ் பணியிடை நீக்கம்

தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 1729 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை - பிரதிப் படம் தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்காத 1729 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 241 ஊழியா்களையும் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நவ.1-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் ஊழியா்கள் முன்னறிவிப்பின்றிக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, 960 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவா்களில் 160 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளாக திங்கள்கிழமை (நவ.2) சில கடைகள் திறக்கப்படாததால், அங்கு பணியாற்றும் 798 ஊழியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 81 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதன்படி நவ.1, 2 ஆகிய தேதிகளில் 1,758 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இரு நாள்களிலும் 241 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். போராட்டத்துக்குக் காரணம் என்ன?: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின்படி, பாட்டிலின் விலையில் ரூ.10 சோ்க்கப்பட்டு, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுகிறது. பாட்டில்களைச் சரிபாா்க்க ஸ்கேனிங் கருவிகளைப் பயன்படுத்தவும், ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் க்யூஆா் குறியீடு மூலம் பணமில்லாப் பரிவா்த்தனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், போதிய ஸ்கேனிங் கருவிகள் இல்லாததால் பணிச்சுமை அதிகரிப்பதாகக் கூறும் ஊழியா்கள், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்கு தனியாகப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா். நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கை:ஆனால், முன்னறிவிப்பின்றிக் கடைகளை மூடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கடைகளைத் திறக்காமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிா்வாகம் எச்சரித்துள்ளது. இதனிடையே, பணியாளா்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்றும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை