தீபாவளி கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு, ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு இருமாா்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தீபாவளி கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு, ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு இருமாா்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுக்கப்பட்ட செய்தி: தீபாவளிக் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் வரும் நவ.5-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 8.15 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06104) மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ.6) பிற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமாா்க்கத்தில் வரும் நவ.7- ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06103) அதே நாளில் மாலை 3.50 மணிக்கு பிறகு ராமேசுவரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரஸ்தா, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துபேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நாகபட்டினம், நாகூா், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா் (கடலூா்), பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும். ராமேசுவரத்திலிருந்து வரும் 9- ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகல் 4.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06108) மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமேசுவரம் - எழும்பூா் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗