சிறு நிறுவனங்களைக் காக்கும் 'விதை நெல்'!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிறு நிறுவனங்களைக் காக்கும் 'விதை நெல்'!

நவராத்திரியிலிருந்து தீபாவளி வரையிலான இந்த 21 நாள் விழாக் கொண்டாட்டம் என்பது, சின்னஞ்சிறு வணிக நிறுவனங்களைப் பாதுகாக்கும் 'விதை நெல்'லாக திகழ்கிறது. பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது; கொண்டாட்டங்கள் என்றாலே அங்குக் கூடுதல் செலவுகள் இல்லாமல் இருக்காது. இந்தச் சின்னஞ்சிறு நுகர்வுச் செலவுகள்தான் நம் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு மூலையில் தேங்கிவிடாமல் சீராகப் பயணிக்கச் செய்யும் முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன. இவ்வாறாக, நவராத்திரிக்கும் தீபாவளிக்குமான இடைப்பட்ட 21 நாள்களை 'இந்தியப் பொருளாதாரத்தின் உந்துக்காலம்' என்றே அழைக்கலாம். இதுபோன்ற விழாக் காலங்களில் பணியாளர்கள் பெறும் போனஸ் மற்றும் இதரச் சிறப்புப் படிகள் சந்தையில் உடனடியாகச் செலவிடப்படுவதால், இந்த விழாக்களை நம்பித் தொழில் நடத்தும் சின்னஞ்சிறு வணிகங்கள் பெரும் வேகமெடுக்கின்றன. மற்ற பண்டிகைகளைப் போல் அல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே காலத்தில் தீபாவளி கொண்டாடப்படுவதுதான் இந்த ஒட்டுமொத்த பொருளாதார உத்வேகத்துக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. உலகின் மிகப் பெரிய நுகர்வுச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், நவராத்திரி-தீபாவளி கால வணிகம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் இதயத் துடிப்பாகவே உறைந்துள்ளது. இந்தியாவில் நிகழும் பெரும்பகுதி நுகர்வு இந்தக் காலத்திலேயே நிகழ்கிறது. குறிப்பாக, மின்விளக்குகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருள்களின் விற்பனை உச்சம் தொடுவது இப்போதுதான். அதேபோன்று, இனிப்புகளின் விற்பனை புதிய உச்சத்தை எட்டுகிறது. அதாவது, நாட்டின் ஆண்டு மொத்த இனிப்பு வணிகத்தில் சுமார் 90 சதவீதம் தீபாவளியின்போதுதான் நடைபெறுகிறது. மேலும், வாகன விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன், ஆட்டோமொபைல் துறை தனது ஆண்டு விற்பனையின் உச்சத்தைப் பெறுகிறது. ஆயுதபூஜை காலத்தில் புதிதாக நிறுவப்படும் தொழில் இயந்திரங்கள், கனரக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் புத்துயிர் தருகின்றன. ஜவுளி வணிகத்தின் அதிகாரபூர்வப் புத்தாண்டு இந்த நவராத்திரி-தீபாவளி காலமே ஆகும். ஆண்டு முழுவதும் ஆடைகளுக்கான தேவை மக்களிடம் உள்ளபோதிலும், இக்காலத்து விற்பனை என்பது ஜவுளித் துறையின் கிரீடம் என்றே சொல்ல வேண்டும். பெயின்ட் நிறுவனங்களின் ஆண்டு விற்பனைகூட இக்காலத்தில்தான் மிக அதிகம். அகர்பத்தி, மெழுகுவர்த்தி, பூஜைப் பொருள்கள் போன்ற குடிசைத்தொழில்கள் கணிசமாகப் பொருள் ஈட்டும் காலமும் இதுவே. உள்ளூர் மளிகைக் கடைகள் முதல் பெருவணிக வளாகங்கள் வரை அடைமழையாக விற்பனையை எதிர்பார்க்கும் காலம் இந்த 21 நாள்கள்தான். கடந்த ஆண்டு நவராத்திரி-தீபாவளி காலங்களில் இந்தியா முழுவதும் நடைபெற்ற வணிக மதிப்பு சுமார் ரூ.6.05 லட்சம் கோடியாகும். இதில் பெரு நிறுவனங்கள் அல்லாத இந்திய நிறுவனங்களின் வணிக மதிப்பு மட்டுமே ரூ.5.40 லட்சம் கோடி என்றால், இந்தியப் பொருளாதாரத்தில் - குறிப்பாகச் சுதேசிப் பொருளாதாரத்தில் - இந்த 21 நாள்கள் பொற்காலம்தானே! கடந்த ஆண்டின் விற்பனையானது, அதற்கு முந்தைய 2024-ஆம் ஆண்டின் விற்பனையைவிட 25 சதவீதம் அதிகம் என்ற நிலையில், 2026ஆம் ஆண்டின் வணிக மதிப்பு 15% முதல் 18% வரை உயர்ந்து, சுமார் ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக சாதனை படைக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால் அரசுக்குக் கூடுதல் வரி வருவாய் (ஜிஎஸ்டி) கிடைக்கும். இந்த வரி வருவாய் நாட்டின் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்குப் பெரும் உந்துசக்தியாக மாறும். இக்காலத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் இணையவழி விற்பனையும் வேகமெடுக்கிறது. புதிய தள்ளுபடிகள், சலுகை விற்பனை எனத் தங்களின் வணிக உத்திகளை அஸ்திரங்களாக்கி விற்பனையை முகட்டுக்கு கொண்டு சேர்க்கின்றன. நிகழாண்டில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் ஆன்லைன் விற்பனை தொடங்கிய முதல் 2 நாள்களிலேயே சுமார் ரூ.24,000 கோடிக்கு மேல் பொருள்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளன. இணையவழி பொருள்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் விநியோக சேவைத் துறையிலும் இக்காலங்களில் தற்காலிக வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகின்றன. கடந்த ஆண்டுகளில் விநியோக மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் மட்டும் சுமார் 50 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி சேவைகள் உள்ளடக்கிய சேவைத் துறையில் மட்டும் கூடுதலாக ரூ.65,000 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த 21 நாள்களின் மகத்துவம் நமக்கு நன்றாகவே விளங்கும். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக விற்பனை நிகழ்த்திச் சாதனை படைத்துள்ளது பட்டாசுகளின் தலைநகரான சிவகாசி. நேரக் கட்டுப்பாடு, பசுமைப் பட்டாசு போன்ற சவால்களுக்கிடையே இந்த அளவிலான வணிகம் நிகழ்ந்திருப்பது ஒரு சாதனையே. நவராத்திரியிலிருந்து தீபாவளி வரையிலான காலத்தில் இந்த விழாக்கோலத்தைக் காண வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரிக்கிறது. இருப்பினும், பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குப் பின் பண விரயத் திண்டாட்டங்களும் சில இருக்கத்தான் செய்கின்றன. பண்டிகைக் காலங்களில் அதிகப்படியாக வாங்கப்படும் தனி நபர் கடன்களில் தீபாவளிக் காலக் கடன்களே முதலிடம் வகிக்கின்றன. உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவிய காலங்களில்கூட, இந்த 21 நாள் வணிகக் கொண்டாட்டம் என்பது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு மீட்புச் சக்தியாகவே இருந்துள்ளது. நவராத்திரியிலிருந்து தீபாவளி வரையிலான இந்த 21 நாள் விழாக் கொண்டாட்டம் என்பது, சின்னஞ்சிறு வணிக நிறுவனங்களைப் பாதுகாக்கும் 'விதை நெல்'லாக திகழ்கிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை