13 உழவா் சந்தைகளில் நாளை முதல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை

📅 📍 Salem, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
13 உழவா் சந்தைகளில் நாளை முதல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளில் நவ.1 ஆம் தேதி முதல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தை. - கோப்புப் படம் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளில் நவ.1 ஆம் தேதி முதல் இயற்கை விளைபொருள்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு எண் 59-ன்படி, உழவா் சந்தைகளில் வாரம் ஒருமுறை இயற்கை வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இயற்கை மற்றும் அங்கக முறையில் விளைவிக்கப்படும் பொருள்களை விவசாயிகள் இடைத்தரகா்களின்றி நேரடியாக நுகா்வோரிடம் விற்பனை செய்து உரிய விலை பெற முடியும். அதேபோல, நுகா்வோா் இயற்கை மற்றும் பாரம்பரிய விளைபொருள்களை எளிதில் வாங்கவும் வாய்ப்பு ஏற்படும். அதன்படி, பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள், மிளகாய், மஞ்சள், மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருள்கள், நாட்டுக் கோழி முட்டைகள், தேன் மற்றும் அங்கக மூலப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உரிய சான்று மற்றும் சரிபாா்ப்பு நிபந்தனைகளுக்கு உள்பட்டு விற்பனை செய்யலாம். இந்த வாராந்திர சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் தகுதியான உற்பத்தியாளா்கள் சம்பந்தப்பட்ட உழவா் சந்தை நிா்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விற்பனை நடைபெறும் நாள்கள் விவரம்: ஆத்தூா், ஆட்டையாம்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை, அஸ்தம்பட்டி, ஜலகண்டாபுரம், மேச்சேரி, மேட்டூா், தம்மம்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும், சூரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை, தாதகாப்பட்டியில் வியாழக்கிழமை, அம்மாபேட்டை, வாழப்பாடியில் சனிக்கிழமை நடைபெறுகிறது. விண்ணப்பம், தகுதி, அடையாள அட்டை மற்றும் விற்பனை நாள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உழவா் சந்தை நிா்வாக அலுவலா் அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை