17 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சிறையில் ஏடிஜிபி சங்கர் ஆய்வு செய்வது பற்றி... தேனி மாவட்ட சிறை - படம்: தினமணி 17 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சிறையில் ஏடிஜிபி சங்கர் ஆய்வு செய்து வருகிறார். தேனி மாவட்டச் சிறையில் கடந்த அக். 26 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவை குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதனிடையே, தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ரத்தோர், மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் சிறை கண்காணிப்பாளர், காவலர்கள் பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறைத் துறை ஏடிஜிபி சங்கர் இன்று தேனி தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் ஆய்வு செய்து வருகிறார். 17 கைதிகள் தப்பியோடியது குறித்தும் சிறையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
17 கைதிகள் தப்பிய தேனி சிறையில் ஏடிஜிபி சங்கர் ஆய்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗