“2026-27 முதல் காலாண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8%” - அனந்த நாகேஸ்வரன்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“2026-27 முதல் காலாண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8%” - அனந்த நாகேஸ்வரன்

புதுடெல்லி: 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சி கண்டுள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொழில் மாற்றமும், தொழில் உத்தியை மறுவரையறை செய்தலும் என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அனந்த நாகேஸ்வரன், “உற்பத்தித் துறை மற்றும் முதலீடுகளில் இந்தியா வலுவான வளர்ச்சியை கண்டு வருகிறது. இதன் காரணமாக, 2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8% ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், இதே காலாண்டில் சரக்கு ஏற்றுமதி 18.5% வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் மனித வளம் அதிகமாக தேவைப்படும் உற்பத்தித் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க இந்தியா தனது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்தி வருகிறது. குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்வதில் இருந்து, இந்தியா தயாரிக்கும் பொருட்களை உலகம் சார்ந்திருக்கும் நிலையை நோக்கி நகர வேண்டும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத் துறையில் நாம் கொண்டுள்ள பாரம்பரிய பலம், பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகிய சாதனைகளுக்கு அப்பால் இந்தியா செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை தொடர்ந்து முக்கியமானதாக இருந்தாலும், சிறந்த கல்வி, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், உயர் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் மூலம், விவசாயத்தில் இருந்து தொழில்நுட்பம் சார்ந்த தொழில் துறைகளை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும். பொருளாதார மீள்தன்மைக்கு இந்தியா தனது உற்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டும், இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்த வேண்டும், எரிசக்தி, தொழில்துறை உலோகங்கள், உரங்கள், மருந்து மூலப்பொருட்கள் மற்றும் முக்கிய கனிமங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை போதுமான அளவுக்கு உருவாக்க வேண்டும். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தைப் பெறும் வகையில் புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், திறன்களை உருவாக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை பாதுகாத்தால், உலகளாவிய போட்டித் திறன்களை வளர்த்தல் ஆகிவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உத்தி தேவை.” என தெரிவித்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை