26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: பெண்​கள், குழந்​தைகளுக்கு எதிரான குற்​றங்​களைத் தடுக்​கவும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரைவாக நீதி கிடைக்​கவும் 26 போக்சோ சிறப்பு நீதி​மன்​றங்​கள் அமைக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். பெண்​கள், குழந்​தைகளுக்கு எதிரான குற்​றங்​களைத் தடுப்​ப​தற்​கும், இத்​தகைய குற்​றங்​களில் ஈடு​படுவோர் மீது விரைந்து சட்ட நட​வடிக்கை மேற்​கொள்​வதற்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உரிய காலத்​தில் நீதி கிடைப்​பதை உறுதி செய்​வதற்​கும் தமிழக அரசு பல்​வேறு முன்​னெடுப்​பு​களை தொடர்ந்து மேற்​கொண்டு வரு​கிறது. அதன் அடிப்​படை​யில், தமிழகம் முழு​வதும் நிலுவை​யில் உள்ள போக்சோ வழக்​கு​களின் நிலை குறித்து நடை​பெற்ற ஆய்வு கூட்​டத்​தில், போக்சோ வழக்​கு​களின் விவரம், தற்​போதைய நிலை மற்​றும் போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவாகும் வழக்​கு​களை மட்​டும் விசா​ரிப்​ப​தற்​கென கூடுதலாக தேவைப்​படும் நீதி​மன்​றங்​கள் ஆகியவை குறித்து தமிழக முதல்​வர் விஜய் விரிவாக கேட்​டறிந்​தார். ஆய்​வின் அடிப்​படை​யில், இவ்​வழக்​கு​களின் விசா​ரணையை விரைவுபடுத்தி, குற்​றம் நிரூபிக்​கப்​படும் நபர்​களுக்கு சட்​டப்​படி உரிய தண்​டனை பெற்​றுத் தரு​வதற்​கான நட​வடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட வேண்​டும் என்​றும், அனைத்து மாவட்​டங்​களி​லும் போக்சோ நீதி​மன்​றங்​களை அமைப்​ப​தற்​குத் தேவை​யான உடனடி நட​வடிக்​கைகளை மேற்​கொள்​ளு​மாறும் முதல்​வர் உத்​தர​விட்​டார். ஏற்​கெனவே பாலியல் குற்​றங்​களில் இருந்து குழந்​தைகளை பாது​காக்​கும் சட்​டம், 2012-ன் கீழ் பதிவு செய்​யப்​படும் வழக்​கு​களை மட்​டும் விசா​ரிப்​ப​தற்​காக, மாநிலத்​தில் 22 சிறப்பு நீதி​மன்​றங்​கள் செயல்​பட்டு வரு​கிறது. அதனையும், மற்​றும் 4 சிறப்பு நீதி​மன்​றங்​கள் செயல்​பாட்​டுக்கு வரும் நிலை ஆகிய​வற்​றையும், நிலுவை​யில் உள்ள வழக்​கு​களின் எண்​ணிக்​கையையும் கருத்​தில் கொண்டு, முதல்​வரின் அறி​வுறுத்​தலின்​படி 12 புதிய சிறப்பு நீதி​மன்​றங்​களும், 14 கூடுதல் சிறப்பு நீதி​மன்​றங்​கள் என மொத்​தம் 26 புதிய சிறப்பு நீதி​மன்​றங்​கள் ரூ. 46.59 கோடி செல​வில் அமைக்க அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், தமிழகத்​திலுள்ள 47 காவல் மாவட்​டங்​களுக்கு மொத்​தம் 52 சிறப்பு நீதி​மன்​றங்​கள் அமைய உள்ளன. இதன் மூலம் பாலியல் குற்​றங்​களில் இருந்து குழந்​தைகளை பாது​காக்​கும் சட்​டம், 2012-ன் கீழ் பதிவு செய்​யப்​படும் வழக்​கு​களை மட்​டும் விரைவாக விசா​ரித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நீதி​யும், இம்​மாதி​ரியான கொடுமையான குற்​றங்​கள் மீண்​டும் நடை​பெறு​வதை தடுக்க ஏது​வாக மிக அதி​கபட்ச தண்​டனையும் குற்​றவாளி​களுக்கு பெற்று தரு​வது உறுதி செய்​யப்​படும். போதைப்​பொருள்: அதேபோல், தமிழக அரசின் “போதைப்​பொருள் இல்​லாத தமிழ்​நாடு” இயக்​கத்​தின் ஒரு பகுதி​யாக, போதைப்​பொருள் கடத்​தல், பயன்​பாட்டை கட்​டுப்​படுத்​து​வதுடன், போதைப்​பொருள்​கள் மற்​றும் மனமயக்​கப் பொருள்​கள் சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​படும் வழக்​கு​களை உரிய சட்ட நடைமுறைகளை பின்​பற்றி விரைந்து விசா​ரித்து முடிக்க அரசு பல்​வேறு நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. தற்​போது, தமிழகத்​தில் 11 சிறப்பு நீதி​மன்​றங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், இச்​சட்​டத்​தின் கீழ் நிலுவை​யில் உள்ள அனைத்து வழக்​கு​களை​யும் விரைந்து விசா​ரித்து முடிக்க வேண்​டியதன் அவ​சி​யத்தை கருத்​தில் கொண்​டும், முதல்​வரின் உத்​தர​வின்​படியும், காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர் மற்​றும் வேலூர் ஆகிய 3 இடங்​களில் தலா ஒரு சிறப்பு நீதி​மன்​றமும், சென்​னை​யில் ஒரு கூடுதல் சிறப்பு நீதி​மன்​றமும் என மொத்​தம் 4 புதிய சிறப்பு நீதி​மன்​றங்​களை அமைக்க தமிழக அரசு, அரசானை வெளி​யிட்​டுள்​ளது. இதன் மூலம், நிலுவை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து விசா​ரித்து முடிப்​ப​தற்​கும், நீதித்​துறை நடைமுறைகளை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கும், போதைப்​பொருள் இல்​லாத தமிழகத்தை உரு​வாக்​கும் அரசின் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்​படுவதற்​கும் வழிவகை செய்​யப்​பட்​டுள்​ளது என்று தமிழக அரசின் செய்​திக்​குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை