27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு

டெல்லி: உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கப்பலின் எஞ்சின் ரூம் தீப்பற்றிய நிலையில், அதிலிருந்த 27 இந்திய மாலுமிகளும் காயமின்றி உயிர் தப்பினர். ஹார்முஸில் தொடரும் இதுபோன்ற தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5ல் ஒரு பகுதி இங்கு தான் நடைபெறுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலை முழுமையாக நிறுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட இதுவரை அதற்கு பலனில்லை. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில்.. இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற MT LOUISE 1 என்ற கப்பலின் அடிப்பகுதியில் சிறிய படகு மூலம் இரண்டு கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பற்றிய நிலையில், அதிலிருந்த 27 இந்திய மாலுமிகளும் காயமின்றி உயிர் தப்பினர். இதே பகுதியில் மற்றொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரான் போர் ஆரம்பித்த பிறகு கண்ணி வெடி மூலம் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இன்றைய தினம் இந்திய மாலுமிகள் இருந்த MT LOUISE 1 கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, நேற்றைய தினம் அக்டோபர் 29ம் தேதி, லைபீரியா நாட்டு கொடியுடன் சென்ற MT ARZANAH என்ற மிக பெரிய கச்சா எண்ணெய் கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இரண்டு இந்தியர்கள் இருந்தனர். இரண்டு கப்பல்களிலும் சேர்த்து மொத்தம் 29 இந்தியர்கள் பயணம் செய்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த இரு தாக்குதல்களிலும் இந்தியர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.. சிறிய படகில் வந்த மர்ம நபர்கள் MT LOUISE 1 கப்பலின் அடிப்பகுதியில் இரண்டு லிம்பெட் கண்ணிவெடிகளைப் பொருத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து எஞ்சின் அறையில் தீப்பற்றியது. கப்பலில் இருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் கப்பல் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. அதேநேரம் இதனால் கடலில் எண்ணெய் கசிவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஓமனின் கசாப் நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக பிரிட்டிஷ் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. கப்பல்களின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் லிம்பெட் கண்ணிவெடிகள் குறைந்த செலவில் தயாரிக்கக்கூடியவை என்றும், சிறிய படகுகள் மூலமாகவே அவற்றை பயன்படுத்த முடியும் என்றும் கடல்சார் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு முதலே இந்த பகுதியில் இதுபோன்ற வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இதேபோன்ற தாக்குதல் முயற்சி நடந்தது. இருப்பினும், அப்போது கப்பலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் வெடிக்காததால் பாதிப்பு ஏற்படவில்லை. ஹார்முஸில் பதற்றம் தணியாமல் தொடர்ந்து இதுபோல தாக்குதல்கள் நடந்தகு வரும் நிலையில், இது சர்வதேச வணிக கப்பல்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை