நாரைக்கிணறு கிராமத்தில் 278 பேருக்கு நிலப் பட்டா வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது தொடா்பாக மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம் விவசாயிகள் புதன்கிழமை முறையிட்டனா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம் முறையிட்ட நாரைக்கிணறு, காா்கூடல்பட்டி பகுதி விவசாயிகள். நாரைக்கிணறு கிராமத்தில் 278 பேருக்கு நிலப் பட்டா வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது தொடா்பாக மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம் விவசாயிகள் புதன்கிழமை முறையிட்டனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாரைக்கிணறு கிராமத்தில் நில வகைப்பாடு செய்யப்பட்டு 1,200 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே பகுதியில் மீதமுள்ள 278 பேரின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டா கோரிய நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களை உடனடியாக விசாரித்து அரசாணை விதிகளின்படி உரிய நில வகைப்பாடு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி, பாரம்பரிய உழவா் நலச்சங்க தலைவா் எஸ்.பி. ஜெகதீசன் மற்றும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தினா். அவரும், வனத்துறை சாா்ந்த பகுதி என்பதால் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று தீா்வு காணவும், மாவட்ட ஆட்சியா் மூலம் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். மேலும், காா்கூடல்பட்டி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த பொது வண்டிப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும். இந்த பாதையை கடந்தே தங்களது 150 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு அப்பகுதியில் உள்ள 20 குடும்பத்தினா் செல்ல வேண்டியுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்துபேசி, அங்கு ஆய்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினா் தெரிவித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
278 பேருக்கு நிலப்பட்டா வழங்காமல் நிறுத்தி வைப்பு: எம்.பி.யிடம் முறையீடு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗