அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி. 31.10.1976 - Dinamani மதுரை, அக். 30 - அரேபியக் கடலில் விணாகப் போய் விழும் கேரள ஆறுகளின் நீரை மேற்கு மலைத் தொடரின் கிழக்கேயுள்ள தமிழ்நாடு மாவட்டங்களுக்குப் பயனுள்ள முறையில் எவ்வாறு திருப்ப முடியும் என்பது குறித்து ஆராய ஓர் நிபுணர் ஆய்வுக் குழுவை அமைக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆப்பனூரில் காலஞ்சென்ற உ. முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில் தமிழக கவர்னர் மோகன்லால் சுகாதியா இந்தத் தகவலைத் தெரிவித்தார். இங்கிருந்து 114 கிலோ மீட் டர் (71 மைல்) தூரத்தில் ஆப்பனூர் இருக்கிறது. மேற்கில் வீணாகப்போய் விழும் ஆறுகளின் நீரைப் பயன்படுத்துவது குறித்து பிரதம மந்திரியுடனும், மற்ற சம்பந்தப்பட்ட மத் திய மந்திரிகளுடனும் கேரள முதல்வருடனும் தாம் பேச்சு நடத்தியதாகக் கவர்னர் கூறினார். இது ஏற்கப்பட்டால் ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் அதிகப் பலன் அடையும் என்று அவர் கூறினார். புதுடில்லி, அக். 30 - நீண்ட காலத்துக்குத் தேர்தலை ஒத்திவைக்கக்கூடாது. ஏனெனில் மக்கள் வாக்குப் பதிவில் அக்கறை இழந்து விடுவார்கள் என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று கருத்து தெரிவித்தார். பார்லிமெண்டுக்கு நாம் தேர்தலை நடத்தாமல் இருந்த காலத்தில் கூட பஞ்சாயத்துத் தேர்தல்களையும், மற்ற தேர்தல்களையும் நாம் நடத்தியிருக்கிறோம் என்று அவர் கூறினார். காங்கிரஸ் ஊழியர்களுக்காக சமுதாய ஆராய்ச்சி தேசிய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது அரசியல் பயிற்சிப் பாட வகுப்பில் பங்கு கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் அவர் மேற்கண்டவாறு கூறினார். தேர்தல் காலத்தில் மக்கள் விரும்பாத (ஜனரஞ்சகம் இல்லாத) கடுமையான முடிவுகளை நாம் மேற்கொள்ள முடியாது. உதாரணமாகக் கடந்த ஓராண்டாக அமெரிக்காலில் நடந்த தேர்தல் ஏற்பாடுகாக் குறிப்பிடலாம். இந்த ஓராண்டில் அங்கு தேர்தல்கள் மட்டும் தான் இருக்கின்றன. வேறு எதுவும் இல்லை என்று அவர் சொன்னார். இங்கிலாந்தில் கூட பல ஆண்டுகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர் சொன்னார். நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஒரு காலத்தில் மக்களின் சக்தியை சிதறவிடக் கூடாது. நெருக்கடி காலத்தின் நலன்களை ஒன்று திரட்டி நிலைப்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார். ... தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
31.10.1976: வீணாகக் கடலில் விழும் கேரள ஆறுகளை த.நா.வுக்கு திருப்ப நிபுணர் குழு
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗