4-வது டி20: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த நியூசிலாந்து!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
4-வது டி20: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி வீரர்கள் - படம் | AP இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்! முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 49 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ஃபின் ஆலன் 31 ரன்கள், டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், அக்‌ஷர் படேல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். நியூசிலாந்து அணிக்கு முதல் வெற்றி! 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 35 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நமன் திர் 28 ரன்கள், அபிஷேக் சர்மா 27 ரன்கள், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்கள் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இந்திய அணியில் ஒருவர் கூட அரைசதம் கடக்கவில்லை. நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேத்யூ ஃபிஷர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை