'48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' - ஆந்திர கடலில் காணாமல் போன 9 தமிழக மீனவர்கள்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' - ஆந்திர கடலில் காணாமல் போன 9 தமிழக மீனவர்கள்

ஆந்திர மாநில பகுதியில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மீனவர்களைக் கண்டறிவதற்கு வான்வழி தேடுதலுக்கு உதவி செய்யுமாறு, கடலோர காவல் படைக்கு தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி விசைப்படகு ஒன்று (IND-TN-02-MM-2584) ஒன்பது மீனவர்களுடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றது. காசிமேட்டைச் சேர்ந்த செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான இந்தப் படவில் சூர்யா என்பவர் ஓட்டுநராகவும் அவருடன் எட்டு மீனவர்களும் பயணித்துள்ளனர். படகில் பத்து நாட்களுக்குத் தேவையான உணவும் உயிர் காக்கும் ஆடைகள் எட்டும் உயிர் காக்கும் மிதவைகள் ஐந்தும் இருந்துள்ளது. ஆந்திர மாநிலம் நிஜாம் பட்டணம் அருகே படகில் இருந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அக்டோபர் 31ஆம் தேதி புயல் காரணமாக மீன்வளத் துறை வானிலை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, படகை அருகிலுள்ள துறைமுகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்று நிறுத்துமாறு படகின் உரிமையாளர் செல்வழகன் அறிவுறுத்தியதாக, சென்னை (வடக்கு) மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜான்பெக்கர், மீன்வளத்துறைக்குத் தெரிவித்துள்ளார். அதன்படி, அந்தப் படகு நிஜாம் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி ராமாயப்பட்டணம் துறைமுகத்தை நோக்கிப் படகை அதன் ஓட்டுநர் சூர்யா ஒட்டிச் சென்றுள்ளார். அவ்வாறு செல்லும்போது, விசைப் படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து, அதே பகுதியில் இருந்த வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு படகுக்கு கம்பியில்லாத் தொடர்பு (wireless communication) மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக, மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தத் தகவலை பழுதடைந்த படகில் இருந்த மீனவர்கள் மற்றொரு படகுக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால், 'அதன் பிறகு அந்தப் படகில் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை' என கடலோரக் காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பிறகு படகின் உரிமையாளர் செல்வழகனின் ஏற்பாட்டில் இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட விசைப் படகுகள் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட இடத்துக்குச் சென்றுள்ளதாக, சென்னை (வடக்கு) மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு 'தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகும் காணாமல் போன படகையோ அதில் இருந்த பணியாளர்களையோ குறிப்பிட்ட இடத்தில் கண்டறிய முடியவில்லை' எனவும் மீன்வளத் துறை கூறியுள்ளது. காணாமல் போன படகிலுள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் படகைக் கண்டறியவும் மீனவர்களை மீட்கவும் வான்வழித் தேடலுக்கு (aerial search) ஏற்பாடு செய்யுமாறு கடலோரக் காவல் படைக்கு மீன்வளத் துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஆந்திர கடலோர காவல்படையினரும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இயக்குநர் விஜயகார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது. "மீனவர்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக, கடலோர காவல்படை உள்பட இதர அமைப்புளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என அவர் விளக்கம் அளித்தார். "மீனவர்களிடம் இருந்து கடைசிகட்ட தகவல் கிடைத்து 48 மணிநேரத்திற்கு மேல் கடந்துவிட்டது. ஆனால், அவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார், தமிழ்நாடு மீன்பிடிச் சங்கத்தின் மாநிலத் தலைவர் லோகநாதன். "மீன்வளத்துறை அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் அவர்களின் குடும்பத்தினர் காத்துக் கிடக்கின்றனர். விரைவில் உரிய பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை