தங்கம், வெள்ளி விலை 2வது முறையாக உயர்ந்துள்ளது குறித்து... தங்கம் விலை - கோப்புப்படம் அமெரிக்கா நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவு எதிரொலியாக, தங்கம், வெள்ளி விலை இன்று (நவ. 4) இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இதனைத் தொடந்து, அமெரிக்கா நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 4) காலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,02,600-க்கும் கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,825-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தங்கம் விலை இரண்டாவது முறையாக சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கும் கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 210-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 .10 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்கா தேர்தல் முடிவு எதிரொலி: தங்கம், வெள்ளி விலை 2வது முறையாக உயர்வு!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗