பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து வெளிநாட்டவர் 2 பேர் பலியாகினர். பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து வெளிநாட்டவர் 2 பேர் பலியாகினர். பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ஜெர்மனைச் சேர்ந்த விமான நிறுவனப் பணியாளர் உள்பட இரு வெளிநாட்டினர் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரும் நேற்று குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மின்சாரம் பாய்ந்ததால், இருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது. பலியான நபர்கள் ஜெர்மனைச் சேர்ந்த லுஃப்தான்சா விமான நிறுவனத்தின் பணியாளர் அலெக்சாண்டர் மாக்சிமிலியன் தீஸ் (57) மற்றும் ஐபிஎம் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றிய ஜூராஜ் ஹோர்வாட் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறையின் தகவலின்படி, ஹலசூரு பகுதியில் உள்ள அந்த நட்சத்திர ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டனர். மின்சாரம் தாக்கியதற்கான காரணங்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் வழங்கவில்லை. மின்சாரம் தாக்கிய நபர்களைக் காப்பாற்ற முயன்றபோது அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டிசாண்டிஸ் (41) மற்றும் அங்கு நீச்சல் குளப் பணியாளராகப் பணியாற்றும் ராகுல் திவாரி (28) ஆகியோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹோட்டல் பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
5 நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்: வெளிநாட்டவர் 2 பேர் பலி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗