6 முறை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்! செயின்சாவால் பள்ளி மாணவியை தாக்கிய கொடூரன் அதிரடி கைது

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
6 முறை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்! செயின்சாவால் பள்ளி மாணவியை தாக்கிய கொடூரன் அதிரடி கைது

அமராவதி: ஆந்திராவில் பள்ளிக்குள் புகுந்து 10ம் வகுப்பு மாணவியை செயின்சாவால் சரமாரியாக தாக்கிய 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்ய முயன்றபோது போலீஸ் அதிகாரியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்தின் கால்களில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இந்த காலத்தில் பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் சிலர் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். மோசமான வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொடூர தாக்குதல் அதாவது அன்றைய தினம் அனந்தபூரில் உள்ள ஒரு பள்ளிக்குள் காலை 10 மணியளவில் ஹேமந்த் செயின்சாவுடன் நுழைந்துள்ளார். அப்போது அங்கிருந்த 10ம் வகுப்பு மாணவியை அவர் தாக்கியுள்ளார். மாணவியை மிக கொடூரமாக தாக்கிய அந்த கொடூரன், செயின்சா மூலமாகவும் மாணவியை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு மாணவிக்கும் இதில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமறைவான ஹேமந்தை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜகதீஷ் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆத்மகூர் பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு தனிப்படைகள் அங்கு விரைந்தன. ஹேமந்தை கைது செய்ய போலீசார் முயன்றபோது, அவர் கத்தியால் போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதில் ஒரு காவல் ஆய்வாளர் காயமடைந்தார். முதலில் எச்சரிக்கும் வகையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனாலும் ஹேமந்த் சரணடையாமல் தொடர்ந்து எதிர்த்ததால், அவரது கால்களை நோக்கி ஆறு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவன் காயமடைந்துள்ளான். காயமடைந்த காவல் ஆய்வாளரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஹேமந்துக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே படுகாயமடைந்த மாணவி முதலில் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் 8 மணி நேரம் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு கிரீன் காரிடார் வழியாக அழைத்து செல்லப்பட்டார். முகம், தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் மாணவிக்கு மிக கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது வலது கை துண்டிக்கப்பட்டதுடன், பல இடங்களில் எலும்பு முறிவும், ரத்த நாளங்களில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ரத்தப்போக்கை கட்டுப்படுத்த 10 யூனிட் ரத்தம் செலுத்த வேண்டியிருந்தது. மணிப்பால் மருத்துவமனையில் அவருக்கு சுமார் 12 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே ஆந்திர அமைச்சரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு சென்று மாணவியின் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், மாணவி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்தச் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கூறிய அவர், பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பெண்களை துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை