ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி, 64 வது வயதில் 3 வது திருமணம் செய்துகொண்டது குறித்து... மின் ஹா உடன் ஜிம் கேரி - எக்ஸ் ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி 64வது வயதில் 3வது திருமணம் செய்துகொண்டார். தனது நீண்ட நாள் காதலியான மின் ஹாவை (32 வயது) அவர் திருமணம் செய்துகொண்டார். லாஸ் ஏஞ்சலீஸ் இவர்களின் திருமணம் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது. ஹாலிவுட்டில் நகைச்சுவை கலந்த உடல்பாணியுடன் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ஜிம் கேரி. மாஸ்க், புரூஸ் ஆல்மைட்டி, ட்ரூ மேன் ஷோ உள்ளிட்டவை இவர் நடிப்பில் கவனம் பெற்ற திரைப்படங்களாகும். சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தாத ஜிம் கேரி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளிகளில் அதிகம் பகிர்ந்துகொள்வதில்லை. இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள் காதலியான மின் ஹாவை திருமணம் செய்துகொண்டதாக நடிகரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லாஞ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் திருமண தேதி குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இவர் இதற்கு முன்பு நடிகை மெலிஸா வூமரை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எரின் கேரி என்ற மகள் உள்ளார். 1995 ஆம் ஆண்டு மெலிஸாவை விவாகரத்து செய்துவிட்டு, 1996 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த லெளரன் ஹோலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஓராண்டு கூட இவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. 1997 ஆம் ஆண்டு ஹோலியை விவாகரத்து செய்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
64 வயதில் 3வது திருமணம் செய்துகொண்ட நடிகர் ஜிம் கேரி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗