7 வயதில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் அடையாள அட்டை கேட்டு கண்ணீர் @ ஈரோடு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
7 வயதில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் அடையாள அட்டை கேட்டு கண்ணீர் @ ஈரோடு

இலங்கை இளைஞர் ஜாய் ஈரோடு: ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஜாய் (37) என்பவர், ஈரோடு எஸ்பி அலுவலகத்துக்கு வந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நான் இலங்கையை சேர்ந்தவன். மீனவரான எனது அப்பா, மீன் பிடிக்கச் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த 1997-ல் நான் படகில் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, எனது அப்பாவின் படகை பயன்படுத்தி சிலர் ராமேஸ்வரம் வந்துவிட்டனர். அதில் எனது பெற்றோர் இல்லை. அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் எங்களைப் பிடித்து மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமுக்கு அழைத்துச் சென்றனர். நான் 7 வயது சிறுவனாக இருந்த காரணத்தால் என்னை ஆசிரமத்துக்கு மாற்றினர். நான் வளர்ந்ததும் கடந்த 2014-ல் மண்டபம் முகாமுக்கு கொண்டு வந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் என்னிடம் அடையாள அட்டை, பெற்றோரின் விவரம் கேட்டனர். எனக்கு ஏதும் தெரியாததால், இலங்கை செல்ல முயன்றதாகக் கூறி புழல் சிறையில் அடைத்தனர். ஓராண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நிலையில், என்னை இலங்கைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் மண்டபம் முகாமில் அடைக்கப்பட்டேன். அங்கும் அடையாள அட்டை தராமல், 3 வேளை உணவும் மட்டும் வழங்கினர். எங்கு செல்வதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. முகாமில் இருந்து வெளியேறி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் என் பிரச்சினையை தெரிவித்தும் அவர்களும் என்னை, என் பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் கைதாகி மண்டபம் முகாமில் அடைக்கப்பட்டேன். பின் மீண்டும் வெளியேறி, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அங்குள்ள ஆட்சியர், எஸ்பி என பலரை சந்தித்தேன். என்னை இலங்கைக்கு அனுப்புங்கள் அல்லது இங்கு வாழ எனக்கு அடையாள அட்டை கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை. வாழ வழி கொடுக்கக் கோரி பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். அடையாள அட்டை இல்லாததால், வேலைக்கும் போக முடியவில்லை. தற்போது பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தங்கி இருந்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு வருகிறேன். சிலருக்கு கால்பந்து விளையாட்டு கற்றுக் கொடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு கருணை காட்டி, அடையாள அட்டை பெற்றுத்தர வேண்டும்” என்று இளைஞர் ஜாய் கூறினார். இதனிடையே, எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த கியூ பிரிவு போலீஸார், இளைஞர் ஜாய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை