கத்துவா கிராமத்தின் வைரல் பாட்டி என அறியப்படும் 73 வயதான வித்யா கவுர் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளார். அவர் கார் மற்றும் இதர வாகனங்களை ஓட்டும் காணொளிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. ஆனால் இந்தப் பயணம் தொடங்கியது எப்போது? 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கார் ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள தொடங்கியபோது பல கஷ்டங்களை எதிர்கொண்டார். இருந்தபோதிலும் தனது விருப்பத்தைத் தொடர்ந்தார். அவரின் கதை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'73 வயதில் கார் ஓட்டும் பஞ்சாப் மூதாட்டி' - வைரல் ஆவதன் பின்னணி