தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக இபிஎஸ் வேதனை... எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆந்திரத்துக்குச் செல்லும் தமிழக தொழில் முதலீடுகள்! இபிஎஸ் குற்றச்சாட்டு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗