ஆப்கனில் அபின் உற்பத்தி 5 மடங்கு அதிகரிப்பு - ஐநா கவலை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
ஆப்கனில் அபின் உற்பத்தி 5 மடங்கு அதிகரிப்பு - ஐநா கவலை

ஆப்கனின் படாக்‌ஷான் மாகாண பகுதி ஆப்கானிஸ்தானில் அபின் போதைப் பொருள் உற்பத்திக்கு அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ள போதிலும், அந்நாட்டு விவசாயிகள் தடையை மீறி அவற்றை உற்பத்தி செய்து வருவதாகவும், இதன் உற்பத்தி 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல பத்தாண்டுகளாக, சட்டவிரோத அபின் உற்பத்தியில் ஆப்கானிஸ்தான் உலகிலேயே முதன்மை நாடாக இருந்து வந்தது. உலகளாவிய அபின் உற்பத்தியில் சுமார் 80 சதவீதத்தை ஆப்கானிஸ்தான் பயிரிட்டு வந்தது. 2021 ஆகஸ்ட்டில் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அதன் பிறகு மதக் காரணங்களைக் குறிப்பிட்டு அபின் பயிரிடப்படுவதற்கும், அனைத்து வகையான போதைப் பொருட்களுக்கும் அவர்கள் 2022 ஏப்ரலில் தடை விதித்தனர். இந்த ஆண்டு 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான அபின் பயிர்களை அழித்துள்ளதாக ஆப்கன் ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பல விவசாயிகள் தடையை மீறி செயல்பட புதிய உத்திகளைக் கையாள்கின்றனர். குறிப்பாக தானிய வயல்களுக்கு இடையிலோ அல்லது சுவர்களால் சூழப்பட்ட இடங்களுக்குள்ளோ அவர்கள் சிறிய அளவில் அபின் பயிரிடுகின்றனர். இன்னும் சிலர், அதிகாரிகள் அறியாத வகையில் வெவ்வேறு கால இடைவெளியிகளில் பயிரிட்டு அறுவடை செய்கின்றனர். தற்போது அபன் பயிரிடப்படும் நிலப்பரப்பு 10 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து 43 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேலாக அதிகரித்துள்ளது. உற்பத்தி சுமார் 300 டன்களில் இருந்து 1,500 டன்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது. எனினும், தடைக்காலத்துக்கு முன்பு 2.32 லட்சம் ஹெக்டோர் நிலத்தில் அபின் பயிரிடப்பட்டு வந்துள்ளது. இது குறித்து ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலக நிர்வாக இயக்குநர் மோனிகா ஜுமா கூறுகையில், “அபின் பயிரிடுதல் நான்கு மடங்கு அதிகரித்திருப்பது, ஏழை விவசாயிகளுக்கு தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழிகள் இல்லாததே காரணம். சட்டவிரோத அபின் உற்பத்தியை தடுப்பது கடினமாக இருப்பதற்கு இதுதான் காரணம். விவசாய சமூகங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அவர்களின் வாழ்வாதாரம், விவசாய உள்கட்டமைப்பு, சந்தை ஆகியவற்றில் ஆப்கன் ஆட்சியாளர்கள் முதலீடு செய்ய வேண்டும். ஆப்கனிஸ்தானிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள நாடு கடந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை தகர்க்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை” என தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 16 மாகாணங்களில் அபின் சாகுபடி நடக்கிறது. இது கடந்த ஆண்டை விட ஐந்து மாகாணங்கள் அதிகம். ஆபகனின் வடகிழக்கு பகுதி நாட்டின் முக்கிய அபின் உற்பத்தி மையமாக மாறி உள்ளது. அபின் விலை கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு 570 டாலராக இருந்த நிலையில், தற்போது அது 500 டாலராக குறைந்துள்ளது. எனினும், தடைக்கு முன் இது 100 டாலராக இருந்தது என்பதால், விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை