ஆர்.எஸ்.எஸ். கோட்டையான நாக்பூரை தக்கவைத்த காங்கிரஸ்! எம்எல்சி தேர்தலில் முதல் வெற்றி!!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆர்.எஸ்.எஸ். கோட்டையான நாக்பூரை தக்கவைத்த காங்கிரஸ்! எம்எல்சி தேர்தலில் முதல் வெற்றி!!

சட்டமேலவைத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் கோட்டையான நாக்பூரை தக்கவைத்த காங்கிரஸ் கட்சியைப் பற்றி... பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் கோட்டையாக கருதப்படும் நாக்பூர் பிரிவு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்ட மேலவைகளில் 28 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றன. வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மொத்தம் 28 ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் 11 (ஆசிரியர்கள் 6, பட்டதாரிகள் 5), பிகாரில் 8 (ஆசிரியர்கள், பட்டதாரிகள் தலா 4), மகாராஷ்டிரத்தில் 5 (ஆசிரியர்கள் 2, பட்டதாரிகள் 3), கர்நாடகத்தில் 4 (ஆசிரியர்கள், பட்டதாரிகள் தலா 2) தொகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பெரும்பாலான இடங்களுக்கு புதன்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நான்கு மாநில சட்டமேலவை தேர்தல்களில் மிகப்பெரிய பின்னடவைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் நான்கு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதேநேரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கோட்டையாகக் கருதப்படும் மகாராஷ்டிர சட்ட மேலவையின் நாக்பூர் பிரிவு பட்டதாரிகள் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நீண்ட நேரம் நடைபெற்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி, பாஜகவின் சுதாகர் கோஹ்லேவை 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். வஞ்சாரி, கடந்த 2020-ஆம் ஆண்டில் நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊராகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவைத் தொகுதியாகவும் இருக்கும் நாக்பூரில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. #WATCH | Nagpur, Maharashtra: Congress candidate Abhijit Vanjari has taken a lead over the BJPâs Sudhakar Kohale during the counting of second-preference votes in the Graduates' MLC election.Congress candidate Abhijit Vanjari said, "The BJP exerted all its mightâall their⦠pic.twitter.com/5TRjbmntmH தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை