நாக்பூரில் பாஜக தோல்வி குறித்து கே.சி. வேணுகோபால் பேசியது தொடர்பாக... கே.சி. வேணுகோபால் - ஏஎன்ஐ ஆர்.எஸ்.எஸ். கோட்டையாக விளங்கிவரும் நாக்பூர் எம்.எல்.சி. தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளதாகவும், இது நாட்டு மக்களுக்கான தெளிவான செய்தி எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (அக். 29) விமர்சித்தார். தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்காளுடன் கே.சி. வேணுகோபால் பேசியதாவது: ''நவ. 1 ஆம் தேதி திட்டமிட்டுள்ள பேரணியில் மட்டுமே நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். பொய்களைக் கூறி நாட்டில் உள்ள மக்களை பிரதமர் மோடி தவறாக வழிநடத்துகிறார். காங்கிரஸ் தோல்வி குறித்து பாஜக பேசுவதும் அதைப்போன்றுதான். அவர்கள் வாரணாசியில் தோல்வி அடைந்தது ஏன்? நாக்பூரில் தோல்வி அடைந்தது ஏன்? ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் தோற்றது ஏன்? ஒட்டு மொத்த நாடும் நவம்பர் 1 ஆம் தேதிக்காக காத்திருக்கிறது. அதற்காக முழுமையாகத் தயாராகியிருக்கிறோம். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டியவர் என்பதை நாட்டு மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அவரின் குற்றத்தை மக்கள் தெரிந்துகொண்டனர். அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் தயாராக இல்லை. பதவி நீக்கத்தை வலியுறுத்தி நடக்கும் நமது போராட்டத்தின் கோரிக்கைகளை அவர்கள் ஏற்கமாட்டார்கள். அதனால், நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து பதவியில் இருந்து அவரை நீக்கவுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗