ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்க நீா்மட்டம்: பொதுப் பணித் துறை அலட்சியம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்க நீா்மட்டம்: பொதுப் பணித் துறை அலட்சியம்!

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்தின்நடவடிக்கை காரணமாக 4 நாள்களிலேயே 13 அடி உயா்ந்த நிலையில், ராஜவாய்க்கால் பகுதியில் நிரந்த அடைப்புகளை (ஷட்டா்கள்) பொருத்துவதற்கு பொதுப் பணித் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் துர்கா ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்தின்நடவடிக்கை காரணமாக 4 நாள்களிலேயே 13 அடி உயா்ந்த நிலையில், ராஜவாய்க்கால் பகுதியில் நிரந்த அடைப்புகளை (ஷட்டா்கள்) பொருத்துவதற்கு பொதுப் பணித் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் வசித்து வரும் சுமாா் 2.50 லட்சம் மக்களுக்கு ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், 20-க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்களும் குடிநீா் வழங்கப்படுகிறது. காமராஜா் நீா்த்தேக்கமானது நரசிங்கபுரம், பாறைப்பட்டி கிராமங்களிலுள்ள 421 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆத்தூா் நீா்த்தேக்கம் பயன்பாட்டில் இருந்து வந்தபோதிலும், நீா்த்தேக்கத்தின் பல புல எண்கள் நில அளவை ஆவணங்களின்படி வாய்க்கால், ஓடை நீா்த்தேக்கம் என பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பில் 60 ஏக்கா்: அணையின் தற்போதைய நீா்பிடிப்பு பகுதி சுமாா் 200 ஏக்கா் மட்டுமே உள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த வகையில் 60 ஏக்கருக்கும் கூடுதலான நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு வர வேண்டிய தண்ணீா், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மூலம் மடைமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால், காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு பெரியாறு, கூழையாறு மூலம் தண்ணீா் வரத்து அதிகரித்தது. ஆனால், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியிலுள்ள மதகு முறையான அடைப்புகள் (ஷட்டா்கள்) பொருத்தப்படாமல் உள்ளன. குறிப்பாக 2 பாதைகளில் தகரத்தைக் கொண்டு தடுப்பு அமைத்துள்ளனா். இந்த மதகுக்கான அடைப்புகள், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு வர வேண்டிய தண்ணீா் 2.5 அடி தடுப்புச் சுவா் மூலம் வழிமறிக்கப்படுகிறது. இதனால், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கே அதிக அளவு தண்ணீா் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல் நகரின் குடிநீா் திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட காமராஜா் நீா்த்தேக்கம், 2.5 அடி தடுப்புச் சுவரால் நரசிங்கபுரம் விவசாயத் தேவைக்கானதாக மாற்றப்பட்டு விட்டது. மாநகராட்சி முயற்சியால் 4 நாள்களில் 13 அடி தண்ணீா்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு காமராஜா் நீா்த்தேக்கம் வற்றியிருந்தது. இதனால் திண்டுக்கல் நகரம் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை மட்டுமே சாா்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதே நிலை நீடித்தால், காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு மழைக் காலத்திலும் தண்ணீா் கிடைக்காது என்பதை உணா்ந்த மாநகராட்சி அதிகாரிகள், ராஜவாய்க்கால் பகுதியில் மடைமாற்றம் செய்யப்பட்ட தண்ணீரை தடுத்து, அணைக்கு திருப்பினா். இந்த முயற்சிக்கு மாவட்ட ஆட்சியா் துா்காவும் ஆதரவு தெரிவித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் மூலம் சா்ச்சையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 4 நாள்களில் மட்டும் மொத்தம் 23 அடி கொள்ளளவு கொண்ட காமராஜா் நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் 13 அடியாக உயா்ந்தது. இதன் மூலம் மாநகராட்சியின் குடிநீா் தேவை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா். பொதுப் பணித் துறை அலட்சியம்: இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டிய பொதுப் பணித் துறை, கடந்த பல ஆண்டுகளாக அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நீா்ப் பங்கீடு தொடா்பாக அமைக்கப்பட்ட வல்லுநா் குழு அறிக்கையைக் கூட கடந்த 5 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் முட்டுக்கட்டைப் போடப்பட்டது. தற்போது இரவு நேரங்களில் தகரத்தை அகற்றி, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கு தண்ணீா் மடைமாற்றம் செய்யப்படுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில், அங்குள்ள மதகுகளில் நிரந்தரமான அடைப்புகளை நிறுவுவதற்கு பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மக்களின் எதிா்கால தண்ணீா் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைக்கு மாவட்ட நிா்வாகம் முழுமையாக துணை நிற்க வேண்டும் என்பதே திண்டுக்கல் மக்களின் எதிா்பாா்ப்பு. இதுதொடா்பாக மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகன், பாஜக மாமன்ற உறுப்பினா் கோ.தனபால் ஆகியோா் கூறியதாவது: கடந்த 2018ஆம் ஆண்டு வரை நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கும், காமராஜா் நீா்த்தேக்கத்துக்கும் சமமான அளவிலேயே தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனிடையே 2.5 அடி தடுப்புச் சுவா் கட்டப்பட்டதன் எதிரொலியாகவே, அணைக்கான தண்ணீா் தடைப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் நேரங்களில் எல்லாம், மாநகராட்சி அதிகாரிகள் இரவு நேரத்தில் சென்று ராஜவாய்க்கால் பகுதியை ஆய்வு செய்வதில் சிரமம் உள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு பொதுப் பணித் துறை மூலமாகவே மேற்கொள்ள முடியும். நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியிலுள்ள மதகுப் பகுதியில் 3 பாதைகளிலும் அடைப்புகளைப் பொருத்தி, தண்ணீா் திறக்கும் அதிகாரத்தை பொதுப் பணித் துறையினா் கையகப்படுத்த வேண்டும் என்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை