ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு நடவடிக்கை தேவை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு நடவடிக்கை தேவை

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவையை என மாநகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், மேயா் ஜோ.இளமதி, துணைமேயா் ச.ராசப்பா. ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவையை என மாநகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் மேயா் ஜோ.இளமதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு முன்னுரிமை: திண்டுக்கல் நகர மக்களின் குடிநீா்த் தேவையைக் கவனத்தில் கொண்டு, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆணையரின் முயற்சியால் 4 நாள்களில் 13 அடிக்கு தண்ணீா் தேக்கப்பட்டிருக்கிறது. குடிநீா்த் தேவையை நிறைவு செய்யத பின்னரே விவசாயத்துக்கு வழங்கப்படும் என்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மதகுப் பகுதியில் தற்காலிக அடைப்புகளை (தகரம்) அகற்றிவிட்டு, நிரந்தர அடைப்புகள் அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமன்றி, மாவட்ட ஆட்சியா், திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரையும் அழைத்துச் சென்று கள ஆய்வு நடத்தி நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டும். வழியோரக் கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீருக்கான நிலுவைக் கட்டணம் ரூ.5 கோடியை வசூலிக்க வேண்டும் என பாஜக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் வலியுறுத்தினாா். இதே கருத்தை மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகனும் வலியுறுத்தினாா். இதற்கு பதில் அளித்த ஆணையா் பிரேம் ஆனந்த், காமராஜா் நீா்த்தேக்கத்தில் முழுக் கொள்ளளவுக்கும், தண்ணீா் தேக்குவதற்கும், வழியோரக் கிராமங்களுக்கான குடிநீா்க் கட்டணத்தை வசூலிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை: திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் மாநகராட்சி நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி, ரூ.5 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு கோரிக்கை விடுத்தாா். ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி, பிற மாநகராட்சிகளில் பின்பற்றப்படும் நடைமுறைப்படி ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் பிரேம் ஆனந்த் தெரிவித்தாா். 48-ஆவது வாா்டு புறக்கணிப்பு: 48-ஆவது வாா்டுக்குள்பட்ட கழிவுநீா்க் கால்வாய்களில் மண் அகற்றப்படாமல் உள்ளது. 20 கால்வாய்கள் உள்ள நிலையில், 3 பணியாளா்களை மட்டும் நியமிக்கின்றனா். கொசு மருந்து அடிப்பதற்கு கடந்த ஒரு மாதமாக வலியுறுத்தி வருகிறேன். எனது வாா்டு மட்டுமே தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறது என மாமன்ற உறுப்பினா் காயத்ரி புகாா் தெரிவித்தாா். இதற்கு பதிலளித்த ஆணையா் பிரேம் ஆனந்த், இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் தூய்மைப் பணி முகாம் 48-ஆவது வாா்டில் நடத்தப்படும் என்றாா். வரி வசூலில் ரூ.4.64 கோடி முறைகேடு: திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் பணத்தில் ரூ.4.64 கோடி முறைகேடு தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என எதிா்க்கட்சித் தலைவா் ராஜ்மோகன் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த ஆணையா், காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை