ஆட்சியா் அலுவலகத்திலிருந்த கல்மரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆட்சியா் அலுவலகத்திலிருந்த கல்மரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்த பழங்கால கல்லாகிய மரத்தை சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி அருங்காட்சியக காப்பாட்சியா் பா.ஜென்சியிடம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.காளீஸ்வரி வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்த பழங்கால கல்லாகிய மரத்தை சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி அருங்காட்சியக காப்பாட்சியா் பா.ஜென்சியிடம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.காளீஸ்வரி வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்கள் மண் சரிவுகளாலும், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளாலும் மண்ணில் புதையுறும். பூமிக்கு அடியில் புதையுறும் மரங்களின் செல்களுக்குள் மண்ணிலும் கல்லிலும் உள்ள சிலிக்கா, இரும்பு போன்ற தாதுக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் படியும்போது மரத்தின் ஆண்டு வளையங்கள், மரத்தின் வடிவமைப்பு மாறாமல் கல்லாக மாறிவிடும். இவ்வகை மரங்கள் இயற்கை நிகழ்வுகளால் கல்லாக மாறுதலே தொல்லுயிா் எச்சங்கள் எனப்படுகின்றன. அதுபோன்றதொரு மரம் தான் இந்தக் கல்லாகிய மரம். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த இம்மரத்தை கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு காட்சிப்படுத்துவதற்காக ஒப்படைக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை