ஆட்டிப்படைக்கும் ஏஐ.. விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த கூகுள்! 5 நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள ஷாக்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
ஆட்டிப்படைக்கும் ஏஐ.. விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த கூகுள்! 5 நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள ஷாக்

சென்னை: உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கடந்த வாரம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த நிலையில், கூகுள் நிறுவனமும் தனது ஏற்கனவே அறிவித்த விருப்ப ஓய்வு திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன்படி 5 நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த விருப்ப ஓய்வு திட்ட சலுகை பொருந்தும் என்று கூறியுள்ளது. இதனை ஏற்று சில பணியாளர்கள் வெளியேற தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு வருகையால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ளன. ஏஐ துறையில் அதிக முதலீடு செய்யவும், செலவீன கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காகவும் ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ளதாக முன்னணி நிறுவனங்களும் கூறி வருகின்றன. விருப்ப ஓய்வு அறிவித்த கூகுள் நிறுவனம் அமேசான், ஆரக்கிள் போன்ற டெக் ஜாம்பவான் நிறுவனங்களும் இதற்கு விதி விலக்கு இல்லை. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்து இருந்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சில குழுக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. முன்னணி ஐடி நிறுவனங்களின் இந்த அறிவிப்புகள் ஐடி துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டெக் துறையில் கோலோச்சும் கூகுள் நிறுவனமும் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு திட்டத்தை கூகுள் அறிவித்து இருந்த நிலையில், அதை தற்போது நீட்டித்து இருக்கிறது. 5 நாடுகளில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றுவர்களுக்கு இது பொருந்தும். இந்தத் திட்டத்தை இதுவரை எத்தனை ஊழியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதேபோன்ற விருப்ப ஓய்வு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு பிறகு ஜூன் மாதத்தில் மேலும் பல நாடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டதாகவும் கூகுள் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்த விருப்ப ஓய்வு திட்ட ஆஃபர் பொருந்தாது. கூகுளின் ஏஐ ஆராய்ச்சிப் பிரிவான டீப் மைண்ட், கூகுள் கிளவுட் ஆகியவை இந்தத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட விருப்ப ஓய்வு திட்டங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்பப் பிரிவுகளை மேலும் வலுப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. எனவே, டீப் மைண்ட் மற்றும் கூகுள் கிளவுட் பிரிவுகளில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், சில குறிப்பிட்ட பிரிவுகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், பணியாளர் கட்டமைப்பை மறுசீரமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. கூகுள் அறிவித்த விருப்ப ஓய்வு திட்டம் சுவிட்சர்லாந்தில் சில ஊழியர்களுக்கு நடைமுறைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. அங்குள்ள கூகுள் ஊழியர்கள் சிலருக்கு ஜூன் மாதம் இந்த விருப்ப ஓய்வு திட்ட ஆஃபர் வந்துள்ளது. இதனை ஏற்று சிலர் ஆகஸ்டில் வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில் கூகுள் நிறுவனத்தில் சுமார் 5,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். விருப்ப ஓய்வு திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டு பணிக்காலத்திற்கும் ஒரு மாதச் சம்பளம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 12 மாதச் சம்பளம் வரை இழப்பீடு பெறலாம்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை