அரசன் திரைப்படத்தின் புதிய புரோமோ குறித்து... நடிகர் சிலம்பரசன், இயக்குநர் வெற்றி மாறன், சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின். நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் புதிய புரோமோ வெளியாகாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. கேங்ஸ்டர் கதையான இதில் பலர் நடித்து வருகின்றனர். இதுவரை சென்னை, மதுரையில் இரண்டு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத படப்பிடிப்பே முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது. இதனால், தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாவதாகக் கூறப்பட்டது. பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்த இந்த புரோமோ 8 நிமிட கால அளவில் இருப்பதாகத் தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், புரோமோவுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்தாலும் அனிருத்தின் பின்னணி இசை இன்னும் கிடைக்கவில்லையாம். தன் திருமண பரபரப்பில் இருப்பதால் அனிருத்தால் அரசனுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் இதனால் டிசம்பர் முதல் வாரத்தில்தான் அரசன் புரோமோ வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம்தான் விளக்கமளிக்க வேண்டும்! தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளிக்கு அரசன் புரோமோ இல்லையா?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗