யூத் ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முதல் இந்திய வீராங்கனையாக தன்வி சாதனை படைத்துள்ளது குறித்து... இந்திய வீராங்கனை தன்வி பத்ரி - படம்: எக்ஸ் / சாய் மீடியா யூத் ஒலிம்பிக்ஸில் மகளிர் பாட்மின்டன் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முதல் இந்திய வீராங்கனையாக தன்வி பத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் டாகரில் யூத் ஒலிம்பிக்ஸ் 2026 நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை யூஸுனோ வாடனபேயுடன் மோதினார். இந்தப் போட்டியில் 15 வயதான இந்திய வீராங்கனை தன்வி பத்ரி 21-14, 11-21, 21-19 என்ற கேம்களில் த்ரில் வெற்றி பெற்றார். 54 நிமிஷங்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது. முதன்முறையாக யூத் ஒலிம்பிக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை தன்வி பத்ரி தற்போது இறுதிக்கும் முன்னேறியுள்ளார். பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்துவாஎ என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்திய தரப்பில் 2010ல் சிங்கப்பூர் போட்டியில் பிரணாய் வெள்ளியும், 2018ல் பியுனோஸ் அயர்ஸ் போட்டியில் லக்ஷயா சென் வெள்ளியும், 2014 போட்டியில் ஆதித்ய ஜோஷி அரையிறுதி வரை முன்னேறி இருந்தனா். இறுதிப் போட்டியில் தன்வி சீன வீராங்கனை இ க்ஸின் ஜாங் உடன் மோதவிருக்கிறார். முன்னதாக இருவரும் ஒரேயொரு முறை ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் மோதியிருந்தார்கள். அதில் சீன வீராங்கனை வென்றிருந்தார். இதற்கு பழிதீர்க்கும் வாய்ப்பு தன்விக்கு அமைந்துள்ளது. History made! ð®ð³ð¸At just 15, Tanvi Patri storms into the Youth Olympic Games badminton final, becoming the first Indian woman to achieve the feat and assuring India a historic medal!One more step to gold. Go, Tanvi! ð¥#YouthOlympicGames #Dakar2026 #Cheer4Bharat #yog2026⦠pic.twitter.com/8BVxQXYdud தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
யூத் ஒலிம்பிக்ஸ் இறுதியில் முதல் இந்திய வீராங்கனையாக தன்வி பத்ரி வரலாற்றுச் சாதனை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗